ஷர்மிலியின் வாழ்க்கையை கவுண்டமணி கெடுத்தாரா? எல்லாமே சுத்த பொய்.. பயில்வான் ரங்கநாதன் கொந்தளிப்பு!

சென்னை: குரூப் டான்ஸாராக ரஜினிகாந்தின் தர்மதுரை படத்தில் ஆடிட்டு இருந்த ஷர்மிலியை தன்னுடன் காமெடி காட்சிகளில் நடிக்க வைத்து அவரை பிரபலப்படுத்திய கவுண்டமணி பற்றி ஷர்மிலி சமீபத்தில் பேசியது கொஞ்சம் கூட மனசாட்சியற்ற பேச்சு என பயில்வான் ரங்கநாதன் லேட்டஸ்ட் வீடியோவில் வெளுத்து வாங்கி உள்ளார்.

லெஜண்டரி காமெடி நடிகர் கவுண்டமணியால் தனது வாழ்க்கையே கெட்டுப் போனது என சமீபத்தில் ஷர்மிலி பேசிய பேட்டிகள் வெளியாகி பரபரப்பை கொடுத்தன.

48 வயதில் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள உள்ள நீங்கள் இப்படி செய்நன்றியை மறக்கலாமா என பயில்வான் ரங்கநாதன் ஷர்மிலி பற்றிய பல அந்தரங்க விஷயங்களையும் வெளிப்படையாக போட்டு உடைத்து டேமேஜ் செய்துள்ளார்.

ஃபிளாட் வாங்கி கொடுத்தாரே மறந்துட்டியா: குரூப் டான்ஸராக ஆடிக் கொண்டிருந்த ஷர்மிலியை காமெடி காட்சிகளில் நடிக்க வைத்து சினிமா நடிகையாக மாற்றி வாழ்க்கை கொடுத்ததே கவுண்டமணி தான் என பயில்வான் ரங்கநாதன் சற்று முன் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகை ஷர்மிலியை துவைத்து தொங்கப் போட்டுள்ளார்.

நடிகை ஷர்மிலிக்கு தனியாக ஒரு ஃபிளாட்டையே கவுண்டமணி வாங்கிக் கொடுத்தார். அந்த நன்றியெல்லாம் கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி பேசலாமா என விளாசி உள்ளார்.

அப்பவே 50 ஆயிரம் சம்பளம்: வெறும் 1500 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஷர்மிலிக்கு ஒரு படத்தில் நடிக்க 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அந்த காலத்திலேயே வாங்கிக் கொடுத்தவர் கவுண்டமணி தான்.

ஷர்மிலியை ஒரு நடிகையாக உலகிற்கு காட்டி பல படங்களில் ஷர்மிலியை சேர்த்துக்கோங்க என சிபாரிசு செய்தவரும் கவுண்டமணி தான். அப்படிப்பட்டவர் என் வாழ்க்கையவே கெடுத்துட்டாரு என சொல்ல வாய் கூசவில்லையா என பயில்வான் ஒரே போடாக போட்டுள்ளார்.

ஷர்மிலியை தூக்கியதால் டென்ஷன்: ஆவாரம்பூ படத்தில் ஷர்மிலியை மேல இருந்து தூக்கி இறக்குனேன்னு கவுண்டமணிக்கு என் மேல கோபம். அதன் காரணமாக எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுக்க கூடாதுன்னு கவுண்டமணி சொன்னார்.

ஆனால், அப்படி இருந்தும் அவரால் தான் நான் சினிமாவில் நடிகராக மாறினேன். ஒரு போதும் அந்த நன்றியை நான் மறக்க மாட்டேன் என சொன்ன பயில்வான் ரங்கநாதன் ஷர்மிலி குறித்த சில ஷாக்கிங் விஷயங்களையும் பேசியுள்ளார்.

Bayilvan Ranganathan slams Sharmili for her recent controversial speech about Goundamani

வெளிநாட்டில் கல்யாணமாச்சே அத சொல்லட்டா: ஷர்மிலி வெளிநாட்டுக்கு சென்று அங்கே ஒருவரை காதலித்து மணந்து கொண்டு 2 ஆண்டுகளில் அவரை விட்டு விட்டு திரும்பி வந்து விட்டார் அந்த கதையெல்லாம் நான் சொல்லட்டா? என பயில்வான் ரங்கநாதன் ஷர்மிலியின் வண்டவாளத்தை எல்லாம் தனது பேட்டியில் தண்டவாளம் ஏற்றி உள்ளார்.

ஒரு போதும் ஷர்மிலியின் வாழ்க்கையை கவுண்டமணி கெடுக்கவே இல்லை என்றும் 48 வயதில் குழந்தைக்கு தாயாக போறீங்க வாழ்த்துக்கள், ஆனால், கவுண்டமணி பற்றி அப்படி பேசியதற்கு வெளிப்படையாக சீக்கிரம் மன்னிப்பு கேளுங்கள், இல்லையென்றால் உங்களை பற்றி பல விஷயங்கள் வெளியே வரும் என பயில்வான் ரங்கநாதன் ஷர்மிலியை எச்சரித்து பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.