சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் தொடர்ந்து சிறப்பான இடங்களை பிடித்து வருகிறது ஈரமான ரோஜாவே 2 சீரியல்.
கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடா டிஆர்பியிலும் முக்கியமான ரேட்டிங்கை பிடித்து வருகிறது.
ஆனாலும் கல்யாணத்திற்கு முந்தைய காதலையே வைத்து தொடர்ந்து எபிசோட்கள் காணப்படுவது ரசிகர்களுக்கு சிறிது அயர்ச்சியை கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
காவ்யா குறித்து உற்சாகமாக பேசும் ஜீவா: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களின் வரிசையில் ஈரமான ரோஜாவே 2 தொடரும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்தத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக காதலித்துவரும் ஜீவா மற்றும் காவ்யா, திருமண நேரத்தில் பிரியா கடத்தப்படுவதால் ஏற்படும் குளறுபடியால் ஜோடி மாற்றி திருமணம் செய்துக் கொள்கின்றனர். பிரியாவுக்கும் பார்த்திபனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிரியா ஜீவாவையும் பார்த்தி, பிரியாவின் தங்கை காவ்யாவையும் திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது.
இந்த ஜோடி மாற்றிய திருமணங்களால் ஏற்படும் பிரச்சினைகள், தங்களது காதலை மறக்க முடியாத ஜீவா மற்றும் காவ்யா இருவரும் ஒரு கட்டத்தில் தங்களது காதலை மறந்துவிட்டு, தங்களது துணையுடன் இணைய விரும்புகின்றனர். என்னடா இவ்வளவு சீக்கிரத்தில் முடிவை நோக்கி சீரியல் போகிறதே என்று ரசிகர்கள் யோசித்த நிலையில், தற்போது பார்த்தியும், பிரியாவும் தங்களது துணையை ஏற்க முடியாமல் விலகி செல்கின்றனர்.
அவர்களை ட்விஸ்ட் செய்து விடுகின்றனர் அவர்களது அத்தை தேவி மற்றும் அவரது மகள் ரம்யா. இதனால் இருவருக்குள்ளும் குழப்பம் ஏற்படுகிறது. தொடர்ந்து காவ்யாவும் ஜீவாவும், பார்த்தி மற்றும் பிரியாவின் அன்பை பெறுவதற்காக பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி வருகிறது. இதனிடையே காவ்யா கர்ப்பமாகிறார். தன்னுடன் அன்பாக இல்லாத பார்த்தியிடம் இந்த விஷயத்தை கூற முடியாமல் மறைக்கிறார் காவ்யா. விஷயம் தெரியவந்ததும் பார்த்தியின் கோபம் இரட்டிப்பாகிறது.
இதனிடையே தேவியின் அட்வைசை மனதில் ஏற்றும் பிரியா, ஜீவாவுடன் தனிக்குடித்தனம் போகும் முடிவை ஜீவாவிடமும், அவரது பெற்றோரிடம் கூறுகிறார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. இந்நிலையில் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் காவ்யாவை, பிரார்த்தனை செய்துக் கொண்டு பாட்டு பாடும்படி அவரது மாமியார் பார்வதி கூறுகிறார். காவ்யாவும் முகுந்தா முகுந்தா பாடலை அழகாக பாடுகிறார்.
இதையடுத்து ஜீவாவிடம் பேசும் அவரது மாமா, காவ்யா அழகாக பாடுவதாக கூறுகிறார். இதையடுத்து ஆர்வக்கோளாறில், காவ்யா நன்றாக பாடுவதுடன் நன்றாக நடனமும் ஆடுவார் என்றும், அவரது கல்லூரி நிகழ்ச்சிகளில் அவரது பர்பார்மென்சை முன் வரிசையில் அமர்ந்து விசிலடித்து தான் ரசிப்பேன் என்று கூறுகிறார். இதை பின்னால் அமர்ந்திருக்கும் பிரியா கோபத்துடன் பார்க்கிறார். ஏற்கனவே ஜீவா -காவ்யா காதலால் மிகுந்த கோபத்துடன் இருக்கும் பிரியா முன்பு ஜீவா இப்படி நடந்துக் கொண்டுள்ளதால், அவரது க்ரைம் ரேட் அதிகரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.