Jawan Prevue: இந்திய சினிமாவிலே முதல் முறை: சாதனையில் புதிய உச்சம் தொட்ட 'ஜவான்'.!

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த அட்லீ, தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்றுள்ள இவர், தனது முதல் இந்தி படமாக ஜவானை இயக்கியுள்ளார். ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு எகிற செய்துள்ளது.

ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ராஜா ராணி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதனையடுத்து விஜய்யுடன் இணைந்த அவர் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களை கொடுத்தார். இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம் விஜய் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக மாறினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர் தற்போது ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த்ப்படத்தினை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான இந்தப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

ஷாருக்கானை வைத்து ஒரு அதிரிபுதிரியான கமர்ஷியல் ஹிட் படத்தை அட்லீ கொடுத்துள்ளது டிரெய்லரை பார்க்கும் போதே நன்றாக தெரிகிறது. இந்த முன்னோட்ட வீடியோவில் மொட்டை தலை, நீண்ட தலைமுடி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்துள்ளார் ஷாருக்கான். அத்துடன் டிரெய்லர் கடைசியில் ஜெமினி கணேசனின் ‘பாட்டு பாடவா’ பாடலுக்கு டான்ஸ் எல்லாம் ஆடி அதகளம் செய்துள்ளார் அட்லீ.

Kamal: ரீ ரிலீஸில் மாஸ் காட்டிய ‘வேட்டையாடு விளையாடு’.. பார்ட் 2 ரெடி: கெளதம் மேனன்.!

இந்நிலையில் ‘ஜவான்’ பட டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி முன்னோட்ட வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் ‘ஜவான்’ முறியடித்துள்ளது. இந்திய சினிமாவிலே ஒரு புதிய உச்சத்தை இந்தப்படம் படைத்துள்ளது. இந்த சாதனை ‘ஜவான்’ படத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பினை காட்டியுள்ளது.

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். ஷாருக்கானின் முந்தைய படமான ‘பதான்’ 1000 கோடி வசூல் செய்த நிலையில் , இந்தப்படம் அந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள ‘ஜவான்’ படம் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith: ‘விடாமுயற்சி’ படத்துக்காக வெறித்தனமாக ரெடியாகும் ஏகே: வெயிட்டிங் ஓவர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.