Maaveeran: மாவீரனின் விஜய் சேதுபதி குரல் கொடுத்ததற்கு பின்னணியில் இப்படியொரு காரணமா.!

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பிரின்ஸ் பட தோல்வியை தொடர்ந்து வெளியாகும் இந்தப்படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்கும் என சிவகார்த்திகேயன் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ‘மாவீரன்’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளது. அதாவது ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வானத்தில் இருந்து ஒரு குரல் கேட்பதை போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த குரலை கேட்டு அவர் நடப்பது தான் படத்தின் கதை. ‘மாவீரன்’ பட டிரெய்லரிலே

இதுதொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த குரலுக்காக ரஜினி, கமலை படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் அவர்கள் பிசியாக இருந்ததால் அவர்களால் குரல் கொடுக்க முடியவில்லை என்றும் மிஷ்கின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனையடுத்து அந்த குரல் யாருடையதாக இருக்கும் என பல்வேறு யூகங்கள் இணையத்தில் கிளம்பியது. தனுஷ், சூர்யா இந்த வாய்சை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் விஜய் சேதுபதி தான் மாவீரன் சிவகார்த்திகேயனுக்காக அந்த ஸ்பெஷல் குரலை கொடுத்துள்ளதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். இதற்காக பிரத்யேக ப்ரோமோ வீடியோவும் வெளியானது. இந்த சர்ப்ரைஸ் அப்பேட் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

Kaavaalaa: பட்டையை கிளப்பும் ‘காவாலா’ பாடலில் ரஜினி கிடையாதா.?: இதென்ன புது கதையா இருக்கு.!

இந்நிலையில் விஜய் சேதுபதி இந்தப்படத்திற்கு குரல் கொடுக்க முக்கிய காரணம் இயக்குனர் மிஷ்கின் தான் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது இந்த அசரீரி குரலுக்காக படக்குழுவினர் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கை கூடாமல் போன நிலையில், மிஷ்கின் விஜய் சேதுபதியிடம் பேசியுள்ளார். அவர் சொன்ன உடனே சேதுபதியும் ஓகே சொல்லிவிட்டாராம். மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அவர் மீது அளவுக்கடந்த அன்பு வைத்துள்ளாராம்.

இதன் காரணமாகவே மிஷ்கின் சொன்னவுடனே ‘மாவீரன்’ படத்திற்கு அவர் குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ள இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக அரசியல்வாதி கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jawan Prevue: இந்திய சினிமாவிலே முதல் முறை: சாதனையில் புதிய உச்சம் தொட்ட ‘ஜவான்’.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.