Vijay: மக்கள் சேவை செய்ய நடிப்புக்கு முழுக்கு போடுவதில் சீரியஸாக இருக்கும் விஜய்

Vijay Makkal Iyakkam: அரசியலுக்கு வந்துவிட்டால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என விஜய் தெரிவித்ததாக மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கூறினார்.

​விஜய்​கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் விருப்பம் ஆகும். ரசிகர்களுக்ககாவே தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஜய் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க அரசியலுக்கு வர முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை ஜூலை 11ம் தேதி சந்தித்து பேசினார் தளபதி.உதயநிதி ஸ்டாலின்​திமுகவில் சாதிய பாகுபாடா?ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில்!!​​சந்திப்பு​பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வந்தவர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. நிர்வாகிகளை சந்தித்துவிட்டு காரில் கிளம்பிச் சென்றார் விஜய். அவரின் ஹேர்ஸ்டைல், கெட்டப்பை பார்த்த ரசிகர்களுக்கு வின்டேஜ் விஜய் நினைவுக்கு வந்து மகிழ்ச்சியில் கண் கலங்கிவிட்டார்கள்.

​நடிப்புக்கு முழுக்கு​பனையூரில் நடந்த கூட்டத்தில் 234 தொகுதிகளை சேர்ந்த விஜய் மக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சந்திப்புக்கு பிறகு விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது, நேரம் வரும்போது நான் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவேன். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்காக முழு நேரம் அரசியலில் ஈடுபடுவேன் என விஜய் தெரிவித்தார் என்றார்.

​ரஜினி ரசிகர்கள்​விஜய் அரசியலுக்கு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வைத்திருக்கிறார்களாம். விஜய் ஒரு வார்த்தை சொல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்களாம். விஜய் அரசியலுக்கு வந்தால் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார் ஆகியோரின் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
​அஜித் ரசிகர்கள்​விஜய் ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த், அஜித் குமார் ரசிகர்களுக்கும் ஆகாது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். அதே சமயம் ஏதாவது பிரச்சனை என்றால் ஒன்று கூடிவிடுவார்கள். இந்நிலையில் தான் விஜய் அரசியலுக்கு வந்தால் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என தளபதி ரசிகர்கள் நம்புகிறார்கள்.
​லியோ​விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்திற்கு டப்பிங் பேசி வருகிறாராம். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்துடன் நடிப்பில் இருந்து 3 ஆண்டுகள் பிரேக் எடுத்துவிட்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு தயாராகவிருக்கிறார் என முன்பு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

​Leo: லியோ ஷூட்டிங்கை முடித்த விஜய்: அப்படி இருந்த தளபதி இப்படி மாறிட்டார்

​சரியான முடிவு​முழு நேர அரசியலில் ஈடுபட நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய்யின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதே சமயம் அரசியலில் கவனம் செலுத்திக் கொண்டு படங்களிலும் நடிக்க முடியாது. அதனால் விஜய்ணா எடுத்திருக்கும் முடிவு தான் சரி என்கிறார்கள் ரசிகர்கள். அப்படி என்றால் தளபதி 68 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

​Dhoni: என்னை சி.எஸ்.கே.வில் சேர்த்துக்கோங்கனு கேட்ட யோகி பாபு: நச் பதில் அளித்த தோனி​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.