அடப்பாவமே! இப்படியுமா நடக்கும்? குடும்பத்தையே பிரித்த தக்காளி! ஓட்டல்காரரை விட்டு மனைவி ஓட்டம்! அடடா

போபால்: தற்போது தங்கத்துக்கு நிகரானது போல் மாறியுள்ள தக்காளி பல குடும்பங்களின் மாத பட்ஜெட்டில் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதன் விலையேற்றம் தான். இந்த விலையேற்றத்துக்கு நடுவே தான் தக்காளி ஒரு குடும்பத்தையே பிரித்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.

ஆம். இது உண்மை தான். மத்திய பிரதேசத்தில் வெறும் 2 தக்காளியால் ஏற்பட்ட சண்டையில் ஓட்டல்காரரை விட்டு விட்டு மகளுடன் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதன் விபரம் வருமாறு:

தக்காளி.. இந்தியாவில் தற்போது ஹாட் டாபிக்காக விவாதிக்கப்படும் பொருளாக மாறியுள்ளது. எப்போதும் விலை குறைவாக காணப்படும் தக்காளி இப்போது உச்சம் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.100யை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சில இடங்களில் தக்காளி விலை கிலோ ரூ.150யை கூட கடந்து விற்பனையாகியது. இதனால் இல்லத்தரசிகர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர். சமையலில் முக்கிய பொருளாக தக்காளி இருக்கும் நிலையில் இந்த விலையேற்றம் என்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

இதனால் குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் தக்காளி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சில குடும்பங்கள் உணவில் சேர்க்கும் தக்காளியின் அளவை குறைத்துள்ளன. ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் உள்ளிட்டவற்றை தயாரிப்பதும் பல இடங்களில் கைவிடப்பட்டுள்ளது.

அதோடு தங்கத்துக்கு நிகராக கருதப்படும் தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள், விவசாயிகள் பாதுகாவலர்களை நியமிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் ஒவ்வொரு நாளும் தக்காளி குறித்து புதுபுது செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது ஷாக்கான செய்தி வெளியாகி உள்ளது.

அதாவது வெறும் 2 தக்காளியால் ஓட்டல்காரரிடம் சண்டையிட்டு கொண்டு மனைவி தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். காலை நேர உணவு தயாரித்து வழங்கும் ஓட்டல் நடத்தி வருகிறார். விலையேற்றம் காரணமாக சஞ்சீவ் பர்மனும் தக்காளி பயன்பாட்டை குறைத்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தான் சஞ்சீவ் பர்மனின் மனைவி 2 தக்காளியை தனியே எடுத்து வைத்து இருந்தார். இதனை பார்த்த சஞ்சீவ் பர்மன் அதனை எடுத்து ஓட்டலுக்கான உணவை சமைக்க பயன்படுத்தினார். இதுபற்றி அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார். விலையேற்றத்துக்கு நடுவே தன்னிடம் கேட்காமல் ஏன் 2 தக்காளியை சமையலில் பயன்படுத்துகிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பினார்.

இது வாக்குவாதமாக மாறியது. இந்த வாக்குவாதம் முற்றி எல்லை மீறி சண்டையாக மாறியது. இதனால் கோபமடைந்த சஞ்சீவ் பர்மனின் மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்றார். அப்போது அவர் தனது மகளையும் அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையே மனைவி வீட்டுக்கு திரும்பி வந்துவிடுவார் என சஞ்சீவ் பர்மன் நம்பியிருந்தார். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அவரை சஞ்சீவ் பர்மன் ஆங்காங்கே தேடிப்பார்த்தனர். உறவினர்களிடம் விசாரித்தார்.

அப்போது மகளோடு, மனைவி எங்கு சென்றார் என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இதனால் கவலைக்குள்ளான சஞ்சீவ் பர்மன் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சஞ்சீவ் பர்மனின் மனைவி மற்றும் மகளை தேடி வருகின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.