பிரதான விருத்தி மத்திய நிலையத்திற்காக “பாரிய ஹம்பாந்தோட்டை” பிராந்திய மதீர்த் திட்டம் மற்றும் விரிவான பிரதான திட்டமாக அங்கீகரிப்பதற்காக ஆலோசனை வழங்கும் பணியை சர்பானா ஜூரோங் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு 2018.06.26 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தது. ஆனால் இது வரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக முன்னுரிமை வழங்குவதற்காக தற்போது அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க கொழும்பு நகரம், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களை தந்திரோபாய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான பிரதான திட்ட ம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக்கான பாரிய திட்டம் என்பவற்றை தயாரிப்பதற்கான பொறுப்பையும், சார்பானா ஜூரோங் தனியார் நிறுவனத்திற்கே வழங்க அனுமதியளிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.