Leo: ரிலீசுக்கு முன்பே பட்டையை கிளப்பும் 'லியோ': மாஸ் காட்டும் தளபதி..!

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படம் ப்ரீ பிசினஸில் மாஸ் காட்டி வருகிறது.

​பிரம்மாண்ட ரிலீஸ்விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வருகிறது ‘லியோ’ படம். இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு எகிற செய்து வருகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக இந்தப்படம் இருக்கும் என இப்போதே சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அந்தளவிற்கு கோலிவுட் சினிமாவே பெரிதும் எதிர்பார்க்கும் படமாக ‘லியோ’ உருவாகி வருகிறது.
​லோகேஷ் பாணியில் உருவாகும் லியோலோகேஷ் கனகராஜ், விஜய் இருவரும் முதல் முறையாக ‘மாஸ்டர்’ படத்தில் இணைந்தனர். இந்தப்படம் வசூலில் மாஸ் காட்டினாலும் லோகேஷின் டச் இல்லை என ரசிகர்கள் வருத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது உருவாகி வரும் ‘லியோ’ படத்தினை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அது மட்டுமில்லாமல் ‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தான் இயக்கும் படம் என்பதால், ‘லியோ’ படத்தினை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் லோகேஷ்.
​லியோ ஷுட்டிங் ஓவர்’லியோ’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்துள்ளார் நடிகர் விஜய். இது தொடர்பாக புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த லோகேஷ், ‘இரண்டாவது பயணத்தை சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
​பட்டையை கிளப்பும் லியோ’லியோ’ படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே ப்ரீ பிசினஸில் பட்டையை கிளப்பி வருகிறது. முன்னதாக சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ மற்றும் திரையங்கு உரிமைகள் என அனைத்தையும் சேர்த்து ரூ. 400 கோடி பிசினஸ் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு திரையரங்க உரிமை ரூ. 25 கோடி வரை விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
​சர்ச்சையில் நா ரெடி’லியோ’ படத்திலிருந்து அண்மையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியானது. அனிருத் இசையில் விஜய் பாடிய இந்தப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது இந்தப்பாடல். முழு பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பதை போல் காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் குவிந்தது. இதற்கெல்லாம் மத்தியிலும் டிரெண்டிங்கில் மாஸ் காட்டி வருகிறது ‘நா ரெடி’ பாடல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.