சென்னை: ஓடிடி தளங்களில் ஒவ்வொரு வாரமும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. குறைவான கட்டணத்தில் நிறைவான படங்களை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன ஓடிடி தளங்கள். தற்போது இந்தத் தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.
ஆனாலும் திரையரங்குகளில் ரிலீசாகி, சிலபல காரணங்களால் வரவேற்பை பெறமுடியாமல் போகும் படங்களுக்கு ஓடிடி பிளாட்பார்ம்கள் சிறப்பாக அமைகின்றன.
இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்: திரையரங்குகளுக்கு இணையான வரவேற்பை ஓடிடி தளங்கள் பெற்றுள்ளன. ஒவ்வொரு வாரமும் தங்களது விருப்பத்திற்குரிய ஹீரோக்கள், இயக்குநர்களின் படங்களை பார்க்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு இந்தத் தளங்கள் ஏற்படுத்தி தந்து வருகின்றன. குறைவான கட்டணங்களில் மக்களுக்கு நிறைவான திரை அனுபவங்களை இந்தத் தளங்கள் ஏற்படுத்திவரும் சூழலில், திரையரங்குகளில் அனைத்து படங்களையும் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு வரப்பிரசாதங்களாக இந்த ஓடிடி தளங்கள் விளங்குகின்றன.
ஒவ்வொரு வாரமும் நேரடியாகயும், திரையரங்க ரிலீசை தொடர்ந்தும் ஏராளமான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்கள் ஓடிடி தளங்களில் நாளைய ரிலீசாகவுள்ளன. திரையரங்குகளில் நாளைய தினம் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், ஓடிடியிலும் நல்ல நல்ல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
ஒவ்வொரு வாரமும் இந்த தளங்களில் அதிகமான படங்கள் வெளியாகிவரும் நிலையில் இந்த வாரம் தமிழில் தண்டட்டி படம் ரிலீசாகவுள்ளது. அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அழுத்தமான கதைக்களத்தை கொண்டிருந்த போதிலும் அதிகமான கவனத்தை திரையரங்குகளில் பெறவில்லை. இந்நிலையில் ஓடிடியில் இந்தப் படத்திற்கு அதிகமான வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு, மலையாளத்திலும் தலா ஒரு படங்கள் நாளைய தினம் வெளியாகவுள்ளன. தெலுங்கில் மென் டூ என்ற படம் வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது. இதனிடையே, Ntikkakkakkoru Premandaarnnu என்ற மலையாளப் படமும் நாளைய தினம் வெளியாகவுள்ளது. படத்தில் ஷராஃபுதீன் மற்றும் பாவனா லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் சிம்ப்ளி சவுத் தளத்தில் வெளியாகவுள்ளது.
மேலும் இந்தியில் நாளைய தினம் அதிகமான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. தி ட்ரயல், காலேஜ் ரொமான்ஸ், கோஹ்ரா, இஷ்க் இ நடான், மாயாபஜார் ஃபார் சேல் போன்ற படங்கள் இந்தியில் நாளை வெளியாகவுள்ளன. ஆங்கிலத்திலும் Transformers Rise of the Beasts, quarter back, Survival of the Thickest, Mr Car and the knights templar போன்ற படங்களை நாளைய தினம் பிரபல ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ளன. இதேபோல பர்ன் தி ஹவுஸ் டவுன் என்ற ஜப்பானிய படமும் பர்ட்பாக்ஸ் பார்சிலோனா என்ற ஸ்பானிஷ் படமும் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளன.