\"ஊடுருவிய சீனா..\" வார்ன் செய்த பிரிட்டன்! ஷாக் ஆகி நிற்கும் உலக நாடுகள்! யாரும் எதிர்பார்க்கலையே

லண்டன்: சீனாவின் வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும் நிலையில், இது தொடர்பாகப் பிரிட்டன் நாடாளுமன்ற குழு முக்கிய வார்னிங்கை கொடுத்துள்ளது.

சர்வதேச அளவில் இப்போது மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்றால் அது சீனா தான். கடந்த 30, 40 நாடுகளில் ஏழ்மையான நாடுகளில் ஒன்று என்ற நிலையில் இருந்து பவர்புல் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற நிலையைச் சீனா எட்டிப்பிடித்துள்ளது.

இப்படி மிக வேகமாக வளர்ந்து வரும் சீனா உலகின் மற்ற நாடுகளிலும் பெருந்தொகையை முதலீடு செய்து வருகிறது. ஏதோ பின்தங்கிய நாடுகளில் முதலீடு செய்கிறது என நினைக்காதீர்கள். சீனாவின் முதலீடுகளைக் கேட்டால் தலையே சுற்றிவிடும்.

சீன முதலீடுகள்: உலகின் முக்கிய வளர்ந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் பிரிட்டனில் பல்வேறு துறைகளில் சீனா முதலீடுகளைக் கொட்டி வருகிறது. இதன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் சீனா ஊடுருவியுள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்ற குழுவே எச்சரிக்கிறது. தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரத்தில் சீனா மிகப் பெரிய வல்லரசாகத் தொடர்கிறது என்றும் இது பிரிட்டனுக்கு ஆபத்தாக மாறலாம் என்றும் அந்த குழு எச்சரித்துள்ளது.

பிரிட்டன் நாட்டின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழு இது தொடர்பாக விரிவான ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தது. இதில் சீனாவால் ஏற்பட வாய்ப்புள்ள உளவுத்துறை அச்சுறுத்தல் குறித்து விளக்கப்பட்டுள்ளது. சீன அரசு அல்லது அரசு சாராத நிறுவனங்களால் உளவு பார்க்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆபத்து: சீனா சர்வதேச அளவில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வல்லரசாக மாறுகிறது. இதனால், அனைத்து நாடுகளும் சீனாவை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்ற ஒரு சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இது பிரிட்டனுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்கப் பிரிட்டன் போதுமானதாக நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்லது.

அதில் மேலும், “உலகின் மிகப்பெரிய உளவு கருவியைச் சீனா வைத்துள்ளது. இது பிரிட்டன் புலனாய்வு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஏனென்றால் சீன அரசுக்குச் சொந்தமான மற்றும் அரசு சாராத நிறுவனங்கள், கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்கள், அவ்வளவு ஏன் சாதாரண சீன பொது மக்கள் கூட வெளிநாடுகளில் உளவு மற்றும் குறுக்கீடு நடவடிக்கைகளில், சொந்த விருப்பத்தின் பெயரிலோ அல்லது விருப்பமில்லாமலோ ஒத்துழைக்க வேண்டும் என்பதே அந்நாட்டின் விதியாக இருக்கிறது.

 China Has Penetrated Every Sector Of UK Economy warns the committee

முதலீடுகள்: இது ஒரு பக்கம் என்றால் அதன் பொருளாதார வலிமையால் முக்கிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவது எனப் பல வகையில் தேசியப் பாதுகாப்பில் சீனா தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் சீனா ஊடுருவியுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை எந்தவொரு பெரிய கட்டுப்பாடும் இல்லாமல் சீனா பெருந்தொகையை முதலீடு செய்தே வந்துள்ளது.

இது பொருளாதார அளவில் மட்டும் நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறும் ஆபத்து இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.