காந்தி-மண்டேலா டிராபி: இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயண அட்டவணை

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய தொடர், வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி, ஜனவரி 2024 வரை நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி கலந்துக் கொள்ளும். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை மாலை புதிய சுற்றுப்பயணத்தை அறிவித்தது. இந்த தொடர் இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரை தொடரும். இந்தத் தொடர் 10 டிசம்பர் 2023 முதல் தொடங்கும்.

BCCI and @ProteasMenCSA announce fixtures for India’s Tour of South Africa 2023-24.

For more details – https://t.co/PU1LPAz49I #SAvIND

A look at the fixtures below  pic.twitter.com/ubtB4CxXYX

— BCCI (@BCCI) July 14, 2023

இந்திய அணியின் சுற்றுப்பயணம்

3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் பல நடைபெறும் என்று கூறிய பிசிசிஐ வெள்ளிக்கிழமை மாலை எதிர்பாராமல் திடீரென அறிவித்தது. இதைத் தவிர இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது. டிசம்பர் 10 ஆம் தேதி டர்பனில் டி20 போட்டியுடன் தொடர் தொடங்குகிறது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. பின்னர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 முதல் ஜனவரி 7 வரை தொடங்குகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காந்தி-மண்டேலா டிராபிக்கான தொடராக விளையாடப்படும்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா 

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரத் தொடர் இரண்டு சிறந்த டெஸ்ட் அணிகளைக் கொண்டுள்ளது. தங்கள் தாய் நாடுகளுக்காக மகத்தானபங்களிப்பை வழங்கிய இரு சிறந்த தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவைக் கவுரவிக்கும் டெஸ்ட் தொடர் முக்கியமானது. இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம், சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டியின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும், மேலும் இந்த முக்கிய தேதிகளில் அட்டவணை குறிப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இந்தியாவுக்கு எப்போதும் வலுவான ஆதரவு உள்ளது. சில பரபரப்பான போட்டிகளை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் (Cricket South Africa (CSA),) தலைவர் லாசன் நாயுடு, சுற்றுப்பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.