சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது எனத் தீர்ப்பு அளித்துள்ளார். அமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. எனவே வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். கடந்த 13 ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி […]
