பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை… எப்போது வரப் போகிறது தெரியுமா? பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்தியப் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும் இந்தியா – பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

பிரான்ஸ் மகள்களுக்கு தமிழ் முறைப்படி திருமணம்!

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

அதில் ரஃபேல் எம் ரக கடற்படை போர் விமானம் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் தொடர்பான ஒப்பந்தம் இடம்பெறும் எனக் கூறுகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் முக்கிய பிரமுகர்கள் பலரை மோடி சந்தித்து பேசினார்.

சிகாகோ நகரை சுழன்றடித்த சூறாவளி… வானில் வந்த பெரிய சிக்கல்… பலமாக ஒலித்த சைரன்!

பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டம்

பின்னர் பிரம்மாண்ட அணிவகுப்பு தொடங்கியது. பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியின் வண்ணத்தை வெளியிடும் வகையில் வானத்தில் விமானங்கள் வட்டமிட்டன. இதில் இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

பாரிஸில் இந்திய வம்சாவளி மக்களின் நிகழ்ச்சி

இதற்கிடையில் பாரிஸில் உள்ள லா செய்னே முசிகலே என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் அடுத்த சில மாதங்களில் மேற்கொள்ளப்படும்.

ஒரு நாளைக்கு ரூ.2.38 லட்சம் வருமானம்… சிங்கப்பூரில் மாஸ் காட்டும் அந்த ஒரு மதுபான வகை!

திருவள்ளுவருக்கு சிலை

தமிழ் புலவர் திருவள்ளுவருக்கு இந்திய வரலாற்றில் சிறப்பான இடமுண்டு. இவரது சிறப்பை பிரான்ஸ் மக்களும் கொண்டாடும் வகையில் திருவள்ளுவர் சிலை பிரபலமடையும். இது பிரான்ஸ் நாட்டின் செர்கே பிரிஃபெக்சர் பகுதியில் அமைக்கப்படும். இந்த சிலை இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.

தமிழ் கலாச்சார சங்கம் முன்னெடுப்பு

திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் இடம்பெற்ற கருத்து ஒன்றை சுட்டிக் காட்டினார். தனது குழந்தை பிறரால் பாராட்டப்படும் போது ஒரு தாய்க்கு எந்த அளவிற்கு இன்பம் கிடைக்குமோ? அப்படி ஒரு தருணத்தை உணர்வதாக குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைக்கப்படுவதற்கான முன்னெடுப்பை அந்நாட்டில் உள்ள தமிழ் கலாச்சார சங்கம் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.