சென்னை: ஒரேயொரு போட்டோ ஷுட்டால் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை ஷாலினி. அண்மையில் இவர் நடத்திய விவாகரத்து போட்டோ ஷுட் சோஷியல் மீடியாவில் பலவித விவாதங்களை ஏற்படுத்தியது.
முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் சூப்பர் மாம் போன்ற சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். துணிச்சலான பெண்ணான இவர், விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சீரியல் நடிகை ஷாலினி: அதில், என் முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை திருமணமான ஒரு சில மாதத்திலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். அதன் பின் பெற்றோருடன் வசித்துக் கொண்டு இருந்த போதுதான் ரியாசுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டேன். ஆரம்பத்தில் என்னை அன்பாக பார்த்துக்கொண்ட அவர் நாட்கள் செல்ல அடிக்க ஆரம்பித்தார்.
சரக்கு அடிக்க சொல்லுவான்: முதல் வாழ்க்கை சரியில்லாததால், இந்த வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்று அனைத்தையும் அமைதியாக பொருத்துக்கொண்டேன். குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து குழந்தைக்காக ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டு இருந்தேன். அந்த நேரத்திலும் என்கூட சரக்கு அடி, உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதாலா எனக்கு யாருமே ப்ரன்ஸ் இல்லனு சொல்லி கூட சரக்கு அடிக்க சொல்லுவான்.

ரத்தம் வந்தாலும் விடாம: ஒரு நாள் சரக்கு அடிச்சிட்டு தூக்கிட்டேன் அப்போது என் மேல தண்ணியை ஊத்தி எழுப்பி, நீ மட்டும் நல்லா தூக்குறியானு கேட்டு அடிச்சான். அடிச்ச அடில என் தலையில் இருந்து ரத்தம் வந்துச்சு. ரத்தம் வந்தாலும் விடாம, ரத்தம் வர அளவுக்கு என்ன அடிக்க வெச்சிடியே டீனு சொல்லிட்டு மீண்டும் பயங்கரமா அடிப்பான். அவனைப்பார்த்த யாருமே நம்ப மாட்டாங்க அந்த அளவுக்கு நல்லவன் மாதிரி இருப்பான்.

யாருக்கும் என் கஷ்டம் புரியாது: தினம் தினம் அடிவாங்கி நான் கஷ்டப்பட்டேன், அதனால் தான் விவகாரத்தை போட்டோஷூட் நடத்தி கொண்டாடினேன். எனது செயலை சிலர் விமர்சித்திருந்தாலும், சிலர் நான் எதிர்க்கொண்ட போராட்டங்களையும் சவால்களையும் முழுமையாக புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று அந்த பேட்டியில் ஷாலினி கலக்கத்துடன் பேசி இருந்தார்.