'லால் சலாம்' படப்பிடிப்பை முடித்த கையோடு ரஜினி செய்துள்ள காரியம்: தீயாய் பரவும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தாக ‘ஜெயிலர்’ படம் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிட்டு சோஷியல் மீடியாவை கலங்கடித்து வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏர்போர்ட்டில் கெத்தாக, மாஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

நடிகர் ரஜினி ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வந்தார் ரஜினி. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த்ப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அண்மையில் ‘ஜெயிலர்’ படத்திலிருந்து ‘காவாலா’ பாடல் வெளியானது. பட்டித்தொட்டி எங்கும் மாஸ் காட்டி வரும் இந்தப்பாடலுக்கு தொடர்ச்சியாக வைப் செய்து வருகின்றனர் ரசிகர்கள். அனிருத்தின் மரண மாஸ் இசை, தமன்னாவின் துள்ளலான நடனம், சூப்பர் ஸ்டாரின் மிரட்டலான ஸ்டைல் என ‘காவாலா’ பாடல் வெளியாகி யூடிப் டிரெண்டிங்கில் மாஸ் காட்டி வருகிறது.

இந்தப்பாடலுக்கான ஆரவாரம் குறைவதற்கு முன்பாகவே ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. ‘இது டைகரின் கட்டளை’ என்ற பிரத்யேகமான வீடியோவுடன் இந்தப்பாடலுக்கான மாஸ் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். அதன்படி வரும் 17 ஆம் தேதி இந்தப்பாடல் வெளியாகவுள்ளது. ‘ஜெயிலர்’ படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவுள்ளது.

மாமன்னன் வடிவேலு கதாபாத்திரத்தில் நடித்திருக்க வேண்டியது இந்த நடிகரா.?: ஆச்சரியத் தகவல்.!

‘ஜெயிலர்’ படப்பிடிப்பை முடித்த கையோடு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்தார் ரஜினி. விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் ‘மொய்தீன் பாயாக’ மாஸான ரோலில் நடித்து வந்தார் ரஜினி. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தப்படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பையும் முழுமையாக நிறைவு செய்தார் ரஜினி.

இந்நிலையில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பை முடித்த கையோடு வெளிநாடு சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து மாலத்தீவு தலைநகரான மாலே என்ற நகருக்கு சென்றுள்ளார். இதனை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வேகமாக வைரலாகி வருகினறன.

Maaveeran: ‘மாமன்னன்’ படத்தால் மாவீரனுக்கு சிக்கலா.?: சிவகார்த்திகேயன் அளித்த விளக்கம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.