Sangeetha Vijay: மாவீரன் படம் பார்க்க தியேட்டருக்கு வந்த தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மாவீரன்Maaveeran Twitter Review: மாவீரன் அருமை, சூப்பர், சிவகார்த்திகேயன் வேற லெவல்: ட்விட்டர் விமர்சனம்மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கண்டிப்பாக பார்த்துவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத பிரபலத்தை தியேட்டரில் பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரே குஷி தான்.பா. ரஞ்சித்உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…விஜய் ஆசிமாவீரனுக்கு விஜய்ணாவின் ஆசி கிடைத்துவிட்டது என்கிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள். இதற்கிடையே மாவீரன் படம் பற்றி யாரும் நெகட்டிவாக பேச வேண்டாம் என விஜய் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாவீரன் படம் பார்ப்பவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன்மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என படம் பார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர். மாவீரன் மிஸ்ஸாகாது என்று சிவகார்த்திகேயன் ஏன் அவ்வளவு நம்பிக்கையுடன் கூறினார் என்பது தற்போது நன்றாக புரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள். மாவீரனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
தியேட்டர் விசிட்மாவீரன் நாளில் தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்தார் சிவகார்த்திகேயன். இதையடுத்து சென்னையில் இருக்கும் காசி தியேட்டர் மற்றும் ரோஹினி தியேட்டர்களுக்கு திடீர் விசிட் அடித்தார். காலையிலேயே சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி கரகோஷமிட்டார்கள். சமூக வலைதளங்களில் மாவீரன் பற்றிய பேச்சாக தான் உள்ளது.
காசி தியேட்டர்விளம்பரம்மாவீரன் படம் தெலுங்கில் மாவீருடு என்கிற பெயரில் ரிலீஸாகியிருக்கிறது. மாவீரன், மாவீருடு படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முன்னதாக படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்தார் சிவகார்த்திகேயன். மலேசியா, துபாய்க்கும் சென்று மாவீரன் படத்தை விளம்பரம் செய்துவிட்டு வந்தார். அவர் தீவிரமாக விளம்பரம் செய்தது வீண் போகவில்லை.
உதயநிதி ஸ்டாலின்Maaveeran Review:மாவீரன் படம் எப்படி?: முதல் ஆளாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்மாவீரன் படம் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாசிட்டிவாக விமர்சித்து ட்வீட் செய்தார். அதை பார்த்ததுமே மாவீரன் கண்டிப்பாக பிளாக்பஸ்டராகிவிடும் என ரசிகர்கள் தெரிவித்தார்கள். உதய்ணாவின் டேஸ்ட் நம்மை போன்று இருக்கும். அவருக்கு மாவீரன் பிடித்திருக்கிறது என்றால் நமக்கும் நிச்சயம் பிடிக்கும் என தெரிவித்தார் ரசிகர்கள்.
குவியும் பாராட்டுமாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் விதத்தையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். சிவகார்த்திகேயன், மிஷ்கின் மோதும் காட்சிகள் தீயாக இருக்கிறது. படம் நன்றாக இருக்கும் என்று தெரியும் ஆனால் இந்த அளவுக்கு சூப்பராக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. திரைக்கதை அருமை என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.
சங்கீதா விஜய்மாவீரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தியேட்டருக்கு வந்தார் தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா. அவர் காரில் வந்து இறங்கியதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். விஜய்ணாவுக்கு சிவகார்த்திகேயன் மீது எப்பொழுதுமே தனி பாசம் உண்டு. இந்நிலையில் தன் மனைவியை படம் பார்க்க அனுப்பி வைத்திருக்கிறார் என நெகிழ்கிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள். இதற்கிடையே விஜய்யின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக்கை மாவீரன் ஓடும் தியேட்டரில் காண்பித்திருக்கிறார்கள்.