Mission Impossible 7 Box Office – மிஷன் இம்பாசிபிள் 7.. இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: Mission Impossible 7 (மிஷன் இம்பாசிபிள் 7) டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஏழாம் பாகத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம்.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் திரைப்படமானது கடந்த 1996ஆம் ஆண்டு முதன்முறையாக் வெளியானது. பக்கா ஆக்‌ஷன் காட்சிகளோடு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து 2000, 2006,2011,2015 ஆகிய வருடங்களில் அந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. கடைசியாக 2018ஆம் ஆண்டு மிஷன் இம்பாசிபிள் – பால் அவுட் என்ற பெயரில் இதன் ஆறாவது பாகம் வெளியானது.

மிஷன் இம்பாசிபிள் 7: இந்தச் சூழலில் மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் என்ற பெயரில் அதன் ஏழாவது பாகம் உருவானது. படத்தை டாம் குரூஸ் தயாரித்திருக்கிறார். அவருடன் ஹெய்லே அத்வல், விங் ரஹம்ஸ், ரெபக்கா பர்குசன், சிமோன் பெக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். படமானது கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்தியாவில் ரிலீஸ்: அந்தவகையில் இந்தியாவிலும் படமானது ரிலீஸானது. எப்போது மிஷன் இம்பாசிபிளுக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் இருப்பது வழக்கம். அந்தவகையில் இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை வழங்கியிருக்கின்றனர். இதன் காரணமாக படம் வெளியான முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து ரசித்தனர்.

செம ஆக்‌ஷன்: வழக்கம்போல் மிஷன் இம்பாசிபிள் ஏழாம் பாகத்திலும் ஆக்‌ஷன் காட்சிகள் அற்புதமாக வந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சி, கார் சேஸிங் காட்சி, ரயில் காட்சி என அனைத்துமே கண்களுக்கு விருந்தாக அமைந்ததாக சமூக வலைதளங்களில் கூறுகின்றார்கள் படம் பார்த்த ரசிகர்கள். இதன் காரணமாக படத்துக்கு மேற்கொண்டு கூட்டம் கூட ஆரம்பித்திருக்கிறது.

முதல் நாள் வசூல்: ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்ததன் காரணமாக மிஷன் இம்பாசிபிள் படம் முதல் நாளே இந்தியாவில் கிட்டத்தட்ட 12.5 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. உலக அளவில் முதல் நாள் வசூலாக 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 130 கோடி ரூபாய்) இருக்கிறது. முதல் வாரத்தின் முடிவில் உலக அளவிலான வசூல் நிச்சயம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் வசூல்: இந்நிலையில் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தியாவில் அந்தப் படம் இரண்டாவது நாளில் 9 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதன் காரணமாக படம் வெளியான இரண்டு நாட்களில் மொத்தம் இந்தியாவில் மட்டும் 21.5 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூலித்திருக்கிறது. இன்று சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ரிலீஸ் ஆவதால் தமிழ்நாட்டில் மிஷன் இம்பாசிபிளின் நிலை என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.