Rajinikanth: ஜாலியாக ட்ரிப் கிளம்பிய ரஜினிகாந்த்… இலங்கை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மாலத்தீவு: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் லால் சலாம் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ரஜினி, தற்போது ஜாலியாக ட்ரிப் சென்றுள்ளார்.

இலங்கை வழியாக மாலத்தீவு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளது.

ரஜினிக்கு வரவேற்பு கொடுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியான நிலையில், செகண்ட் சிங்கிள் வரும் 17ம் தேதி ரிலீஸாகிறது. இன்னொரு பக்கம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விதார்த் இருவரும் லீடிங் ரோலில் நடிக்க, சூப்பர் ஸ்டார் மொய்தீன் பாய் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார். இது கேமியோ ரோல் தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் லால் சலாம் படப்பிடிப்பு இருதினங்களுக்கு முன்னர் நிறைவுப் பெற்றது. இதனை ரஜினி, ஐஸ்வர்யா உட்பட லால் சலாம் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஒருபக்கம் ஜெயிலர் ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் லால் சலாம் போஸ்ட் புரொடக்‌ஷனை தொடங்கிவிட்டார் ஐஸ்வர்யா. லால் சலாம் படத்திற்கான டப்பிங் கொடுத்து முடித்ததும், தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. அதற்கு முன்பாக ஜாலியாக ஒரு ட்ரிப் கிளம்பிவிட்டாராம். சென்னையில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் தலைவர்.

Rajinikanth: Superstar Rajinikanths Sri Lanka tour Photos are trending now

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை வழியாக மாலத்தீவு சென்றுள்ளார் சூப்பர் ஸ்டார். இதனால், அவருக்கு இலங்கையில் சிறப்பான வரவேற்புக் கொடுத்துள்ளது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம். கறுப்பு டீ-ஷர்ட், சின்ன ட்ராவல் பேக் உடன் ஹாயாக சென்ற ரஜினிக்கு மலர் கொடுத்து வரவேற்றுள்ளனர். இந்த புகைப்படங்களை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.

தமிழில் டாப் நடிகரான ரஜினி இன்று இலங்கை வழியாக மாலத்தீவு சென்றார். அவரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக வரவேற்றதில் மிக்க மகிழ்ச்சி, இது நல்ல நினைவுகள் எனக் குறிப்பிட்டுள்ளது. ஒருபக்கம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ஜாலியாக டூர் சென்று வருவதிலும் தலைவர் தனிரகம் தான் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.