டாப் கியரில் வேகமெடுத்த சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ்… ஸ்டாலின் சிக்னலும், உள்ளடி அரசியலும்!

தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த இறையன்பு ஐஏஎஸ் ஓய்வு பெறப் போகிறார் என்ற தகவல் வந்ததுமே, அரசு இயந்திரத்தின் வேகம் குறையத் தொடங்கியது. புதிதாக யார் வரப் போகிறார்? அவர் செய்யப் போகும் மாற்றங்கள் என்ன? தாங்கள் எதிர்பார்த்த துறை கிடைக்குமா? போன்ற கேள்விகள் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் எழுந்தது. என்ன தான் சட்ட திட்டங்கள் கொண்டு ஆட்சியாளர்களால் வரப்பட்டாலும், அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை எனில் நேரடியாக பாதிக்கப்படக் கூடியவர்கள் மக்கள் தான்.

சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் நியமனம்மேற்குறிப்பிட்ட விஷயத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்கு முதன்மையானதாக பார்க்கப்படுகிறது. ஒருவழியாக சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இடையிலான நெருக்கம், ஸ்டாலின் நினைத்ததை கச்சிதமாக முடிக்கும் திறன் உள்ளிட்டவை வரும் நாட்களில் தான் தெரியவரும். இந்நிலையில் சிவ்தாஸ் மீனா பதவியேற்றதில் இருந்து அதிகாரிகள் மாற்றம் நடந்து வருகிறது.​ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்கடந்த ஜூன் 29ஆம் தேதி புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டார். அதிலிருந்து தற்போது வரை 4 முறை ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடந்துள்ளது. ஒவ்வொரு உத்தரவிலும் அதிகாரிகள் தேர்வை சிவ்தாஸ் மீனா பார்த்து பார்த்து செய்து வருகிறார். இதில் இரண்டு விஷயங்கள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒன்று, அதிகாரிகள் மூலம் ​முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களுக்கு குடைச்சல் கொடுப்பதாக அமைச்சர்கள் தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்துகிறது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
​கோட்டைக்கு அழுத்தம்இரண்டாவது, துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் அமைச்சர்கள் தலையீடு இருப்பதாக கோட்டை வட்டாரம் கிசுகிசுக்கிறது. தங்களுக்கு ஏற்ப அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனச் சில பரிந்துரைகள் மூலம் கோட்டைக்கு அழுத்தம் கொடுக்கிறார்களாம். இப்படி இருதரப்பும் மாறி மாறி கைகாட்டி கொண்டிருந்தால் அரசு இயந்திரம் எப்படி விறுவிறுப்பாக செயல்படும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக முன்வந்து நிற்கிறது.
​டி.கார்த்திகேயன் ஐஏஎஸ்இதில் மூன்றாவதாக ஒரு விஷயமும் இருக்கிறது. கடந்த ஆட்சியில் பல்வேறு புகார்களுக்கு ஆளான அதிகாரிகளுக்கும் தற்போதைய திமுக ஆட்சியில் முக்கியமான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. உதாரணமாக, சென்னை மாநகராட்சி டெண்டர் விஷயத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்தவர் டி.கார்த்திகேயன் ஐஏஎஸ். இதனால் இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.
​மலர்விழி ஐஏஎஸ்இந்த விஷயத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே கண்டனக் குரல் எழுப்பினார். அவர் தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த ஆட்சியில் தருமபுரி ஆட்சியராக இருந்த மலர்விழி ஐஏஎஸ் மீது கொரோனா கால கிருமி நாசினி கொள்முதலில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. சமீபத்தில் கூட இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது.
​வந்தது புதிய பொறுப்புஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் எப்படி பதவியை வாங்கினார் என்ற பேச்சு தான் கோட்டை வட்டாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
​ஸ்டாலின் கணக்குமு.க.ஸ்டாலினை பொறுத்தவரை புதிய தலைமை செயலாளர் வருகைக்கு பின்னர் அரசு இயந்திரம் வேகமெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதற்கு எந்தவித சமரசத்திற்கும் உட்படாமல், அழுத்தத்திற்கும் ஆளாகாமல் சரியான அதிகாரிகளை துறைகளுக்கு நியமிப்பது சிவ்தாஸ் மீனாவின் பொறுப்பு. இதை உணர்ந்து டாப் கியரில் சில மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.