
விம்பிள்டன் அரை இறுதிப்போட்டியை நேரில் ரசித்த மோகன்லால்
நடிகர் மோகன்லால் சில நாட்களுக்கு முன்பு தான், மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி டைரக்சனில் தான் நடித்து வந்த மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதை தொடர்ந்து அவர் தனது புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக சற்று ரிலாக்ஸ் செய்யும் விதமாக தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற அவர் தற்போது லண்டனில் தங்கியுள்ளார்.
லண்டனில் கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பெண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மோகன்லால் நேரில் கண்டு களித்தார். மேலும் அங்கிருந்த தனது நண்பர்களுடன் தான் எடுத்துக்கொண்டு சில புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் மோகன்லால்.