மும்பை அதானிக்கு தாராவி மேம்பாட்டுத் திட்டத்தைப் பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. மும்பையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அத்தாணி குழுமத்துக்கு ஒப்படைத்து மகாராஷ்டிர அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், ”பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தனது வசம் இருந்த வீட்டு வசதித்துறையை வேறு அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்வதற்கு […]
