சென்னை: தமன்னா என்ன தமன்னா என் ஆட்டத்தை பாருங்க என்று காவாலா பாடலுக்கு இறங்கி ஆட்டம் போட்டுள்ளார் அமலா ஷாஜி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் ஜெயிலர்.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
ஜெயிலர் : அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் பாடலான காவாலா அண்மையில் வெளியானது. இப்பாடலை, அருண்ராஜா காமராஜ் எழுத்தில் தமன்னாவின் நடனத்தில் ஷில்பா ராவ் குரலில் வெளியான இந்த பாடலின் வீடியோவில் ரஜினிகாந்த் ஸ்டைலாக இரண்டு ஸ்டெப் போட்டு சென்றார். பாடல் வெளியான முதலே காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், குழந்தைகள் மத்தியிலும் வைபை ஏற்படுத்தியுள்ளது.
பட்டையை கிளப்பிய பாடல்: முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த பாடருக்கு தங்களின் டான்ஸ் ஆடி இணையத்தில் வெளியிடுவதை, தமன்னா தனது சமூகவலைதளத்தில் ஷேர் செய்து வருகிறார். பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பி வரும் காவாலா பாடல் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை படக்குழு வெயிட்டது. இந்த வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது.
தமன்னா என்ன தமன்னா: இந்நிலையில் டிக்டாக் செயலில் வீடியோ வெளியிட்டு பிரபலமான அமலா ஷாஜி, காவாலா பாடலுக்கு சும்மா இறங்கி ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தமன்னா என்ன தமன்னா இவங்க ஆட்டதை பாருங்க என்றும், அமலா ஷாஜி குட்டி தமன்னாவாக மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் ஆர்வம்: ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இத்திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.