நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம்! மணமகள் முகத்தை மறைத்து வெளியான புகைப்படங்கள்

சின்னத்திரை பிரபலமான நாஞ்சில் விஜயனுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர் தனது நெருங்கிய உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நிச்சயதார்த்த நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எதிலுமே அவரது வருங்கால மனைவியின் முகத்தை காட்டாமல் க்ராப் செய்து வெளியிட்டுள்ளார்.
ஒருபுறம் சக நடிகர்களும் ரசிகர்களும் நாஞ்சில் விஜயனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நெட்டிசன்களோ நாஞ்சில் விஜயன் வனிதா, சூர்யாதேவி, ஐபிஎல் என வரிசையாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். எனவே, திருமணம் நல்லபடியாக நடக்கும் வரை மணப்பெண்ணை யாருக்கும் காண்பிக்கமாட்டார் என அவரை கலாய்த்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.