நான் 'அழகு குட்டி செல்லம்'…. கிருஷ்ணா குறுப் குறும்பு

நாளெல்லாம் திருநாளாக இந்த பார்வை ஒன்றே போதும்… வெண் சங்கின் சந்ததி என கடல் அலைகள் உன் மீது மோதும்… மெல்லிடையில் மெல்லிசை பாடும் வெண்மேகம், பறக்கும் மென் பஞ்சின் இனமல்லவா இந்த பெண்ணின் தேகம், கருங்கூந்தல் இடையிடையே நைல் நதியும் நீந்தும், இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என அந்த தேவதையும் ஏங்கும்… என இளமை துள்ளும் அழகால் மயக்கும் நடிகை கிருஷ்ணா குறுப் மனம் திறக்கிறார்…

கிருஷ்ணா குறுப், அழகு குட்டி செல்லம் ஆனது எப்படி
என் முன்னோர் கேரளா. நான் பிறந்து, வளர்ந்தது மும்பை. அட்வர்டைஸிங் படிச்சிருக்கேன். சைக்காலஜி படிச்சிட்டு இருக்கேன். பரதநாட்டிய கலைஞரான என் நடனம் பார்த்து நடிக்க கேட்டனர். சமூக வலைதளம் மூலம் 'அழகு குட்டி செல்லம்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

இதுரை நீங்கள் நடித்து அசத்திய படங்களின் பட்டியல்
தமிழில் கூட்டாளி, கோலி சோடா 2, கிளாப், ஜோதி, உஷ்ஷ், மலையாளத்தில் பி 32 முதல் 44 வரை என ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களம். தியேட்டர், ஓ.டி.டி., என மாறி, மாறி ரிலீஸ் ஆயிருக்கு.

நீங்கள் நடிக்க விரும்பும் கேரக்டர்கள்
நடித்தர குடும்பத்தில் பிறந்ததால் நடிக்கணும்னு நினைக்கலை. ஆனால் நல்ல படங்கள் வரும் போது நல்லா பண்ணணும்னு தைரியம் வருது. 'கிளாப்'ல் பாக்கியலட்சுமி 'கோலி சோடா 2'ல் மதி, 'அழகு குட்டி செல்லம்'ல் இளம் கர்ப்பிணி பெண் நிலா என நடித்த கேரக்டர்கள் எல்லாம் சவாலானவை. இப்படி கேரக்டர்கள் படத்தின் அடையாளமாக இருக்கணும்னு விரும்புறேன்.

மும்பை வாசியான நீங்கள் தமிழ் நல்லா பேசுறீங்களே
தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பின்னாடி தான் பழகினேன். முதலில் எல்லாம் தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்காது. ஒரு லைட் மேன் தாத்தா தான் சொன்னாரு 'தப்பா இருந்தால் கூட பேசிடும்மா அப்போ தான் தமிழ் புரியும்'னு. இப்போ 'கிளாப்'ல் எனக்கு நானே டப்பிங் பேசியிருக்கேன்.

பரதம், நடிப்பு தவிர உங்களுக்குள் இருக்கும் திறமைகள்
நாட்டிய குரு வசந்த் சேனா சீனிவாசனிடம் 20 ஆண்டுகளாக கத்துக்கிறேன். நிறைய பரத நிகழ்ச்சிகளில் ஆடுறேன். இது தவிர நான் ஹிந்துஸ்தானி கிளாஸிக்கல் சிங்கர், மகாராஷ்டிரா அரசின் அங்கீகரிக்கப்பட்ட மராத்தி சுகன் சங்கீத் சிங்கர், மண்டாலா ஓவிய கலைஞர், யோகா கூட தெரியும். பொதுவாக எனக்கு எல்லா கலைகளும் பழக பிடிக்கும்.

இளம் நடிகைகள் மனதை மென்மையாக்க டிப்ஸ் கொடுங்க
என்ன வேலை இருந்தாலும், இல்லை என்றாலும் மனஅழுத்தம் ஆக கூடாது. கொஞ்சம் முன்னே, பின்னே இருந்தாலும் பரவாயில்லை. 'டேக் இட் ஈஸி பாலிசி' அவசியம். நம்ம மனசுக்கு வாழ்க்கையை புரிய வைச்சாலே போதும்.

அடுத்து வெளிவரும் படங்கள், ரசிகர்களுக்கு சொல்வது
கிருஷ் இயக்கத்தில் நடிகர் விதார்த் உடன், சிங்கர் ஆஜித் உடன், ஒரு வெப் சீரிஸ் என தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கேன். நிறைய ரசிகர்களை கொடுத்த கடவுளுக்கும் ரசிகர்களுக்கும் ரொம்ப நன்றி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.