சென்னை: அஜித்தின் 62வது திரைப்படமான விடாமுயற்சி ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
மகிழ் திருமேனி இயக்கவுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியானாலும் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அதற்கான காரணம் என்ன என்பதை தனது லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு புரிய வைத்துள்ளார் அஜித்.
ஆளே மாறிப்போன அஜித்: அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டியது. அதனால் அவரது 62வது படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது. லைகா தயாரிப்பில் உருவாகவிருந்த ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏகே 62 அபிஸியல் அப்டேட் வெளியானது. ஆனால், அப்போது அஜித் பைக் டூரில் இருந்ததால் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கவில்லை. அதேபோல், மகிழ் திருமேனியும் பைனல் ஸ்க்ரிப்ட் ஒர்க்கில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதனிடையே அஜித்தும் தொடர்ச்சியாக பைக் ட்ரிப் செல்வதில் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதமாவதன் காரணம் குறித்து லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து வருவதாகவும், அதனால் தான் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், அஜித் முன்பைப் போல வெயிட் லாஸ் செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார் எனவும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்பட்டது.
இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட இந்த போட்டோவில் அஜித் ரொம்பவே ஸ்லிம்மாக காணப்படுகிறார். ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்தபடி செம்ம க்யூட்டாக இருக்கும் அஜித்தின் இந்த போட்டோ, ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
இதனைப் பார்த்த ரசிகர்கள், முகவரி படத்தில் வரும் ஸ்ரீதர் கேரக்டர் லுக்கில் அஜித் ஸ்மார்ட்டாக இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம் அஜித் ஸ்லிம்மாக மாறினாலும் அந்த சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை மட்டும் மாற்றவே இல்லை எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.