Jailer: ரசிகர்களின் கவனத்திற்கு…ஜெயிலர் படம் பார்க்க இப்படி தான் வரணுமாம்..!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தமிழ்நாடு முழுக்க பல லைவ் லொகேஷனில் ஜெயிலர் திரைப்படம் படமாக்கப்பட்டு வந்தது.

முதலில் இப்படம் துவங்கப்பட்ட போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது ஜெயிலர் படத்தின் மீது ரசிகர்களுக்கு பலமடங்கு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தான் எனலாம்.

ஜெயிலர் எதிர்பார்ப்பு

மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் காரணமாகவே இப்படம் தற்போது பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

Vidaamuyarchi: ஷூட்டிங் முதல் அஜித்தின் கெட்டப் வரை..ஒருவழியாக வெளியான விடாமுயற்சி படத்தின் அப்டேட்..

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக ஜெயிலர் படத்திலிருந்து காவாலா என்ற பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது.

என்னதான் ரஜினி இப்பாடலில் சில வினாடிகளே வந்தாலும் வழக்கம்போல தன் ஸ்டைலால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். தற்போது காவாலா பாடல் யூடியூபில் பல சாதனைகளை செய்து வருகின்றது. இதையடுத்து ஹுக்கும் என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஒருபக்கம் ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க மறுபக்கம் படத்தை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றது. ஜெயிலர் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரியும் கெவின் படத்தை பற்றி பல தகவல்களை பேசியுள்ளார்.

தரமான திரைக்கதை

அவர் கூறியதாவது, ஜெயிலர் படம் பார்க்க திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் தாமதமாக மட்டும் வந்துவிடவேண்டாம். படம் துவங்கும் முன்பே திரையரங்கிற்கு வந்துவிடுங்கள். ஏனென்றால் படத்தின் முதல் காட்சியில் இருந்தே பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அதை நீங்கள் மிஸ் செய்துவிடாதீர்கள் என கெவின் கூறியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

மேலும் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை போல இப்படத்தின் திரைக்கதையும் விறுவிறுப்பாக இருக்கும் என உறுதியாக கூறியுள்ளார் கெவின். இதையடுத்து படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.