Nayanthara: ஜவானுக்காக நயன்தாராவுக்கும், அனிருத்துக்கும் ஒரே சம்பளம்?

கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவரான அட்லி பாலிவுட் சென்றிருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ஜவான் மூலம் நயன்தாராவும், அனிருத்தும் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார்கள்.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
அண்மையில் வெளியான ஜவான் ட்ரெய்லரை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். யாருய்யா இந்த அட்லி என்கிறார்கள். மேலும் ஆக்ஷன் லேடியாக வந்து மிரட்டியிருக்கிறார் நயன்தாரா. அனிருத்தின் இசை இந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே ஜவானுக்கு இசையமைக்க அனிருத்துக்கு ரூ. 10 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

அப்படி என்றால் லேடி சூப்பர் ஸ்டாருக்கும், அனிருத்துக்கும் ஒரே சம்பளமா என்கிறார்கள் ரசிகர்கள். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் படம் ஒன்றுக்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். ஜவான் மூலம் ரஹ்மானை முந்தி அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராகிவிட்டார் அனிருத்.

Anirudh: ஏ.ஆர். ரஹ்மானை ஓரங்கட்டி அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளரான அனிருத்?

நயன்தாரா படம் ஒன்றுக்கு ரூ. 10 கோடி வாங்கி வருகிறார். அதை தான் அவருக்கு கொடுத்திருக்கிறார்கள். ஜவான் ட்ரெய்லரில் கையில் துப்பாக்கியுடன் நயன்தாரா வந்ததை பார்த்த ரசிகர்கள் அட்லியை பாராட்டியுள்ளனர்.

தன் முதல் ஹீரோயின் சென்டிமென்ட்டை விட மனதில்லாமல் நயன்தாராவை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அட்லி.

அவர் இயக்கிய முதல் படமான ராஜா ராணியில் ஹீரோயினாக நடித்தவர் நயன்தாரா. அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்தே தன் முதல் பாலிவுட் படத்திலும் ராசியான நடிகையான நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறார் அட்லி.

அட்லி, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியா மணி, அனிருத் என கோலிவுட்டில் ஒரு குழுவே பாலிவுட் படத்தில் வேலை செய்திருக்கிறது. ஜவான் படத்தில் நடித்தபோது ஷாருக்கானுடன் நயன்தாராவுக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.

நயன்தாராவை பற்றி பெருமையாக பேசி வருகிறார் ஷாருக்கான். என் மீது அதிக அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் நயன்தாரா. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் என ஷாருக்கான் தெரிவித்ததை கேட்டு நயன்தாரா ரசிகர்கள் நெகிழ்ந்துவிட்டார்கள்.

ஒரு சூப்பர் ஸ்டாரே நயன்தாராவை பற்றி இப்படி பெருமையாக பேசியிருக்கிறாரே என சினிமா ரசிகர்களும் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக கடந்த ஆண்டு நடந்த நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் ஷாருக்கான். அதன் பிறகு சென்னையில் ஜவான் படப்பிடிப்பு நடந்த போது நயன்தாராவின் வீட்டிற்கு சென்று அவரின் இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலகை பார்த்தார்.

Nayanthara: நயன்தாராவிடம் உஷாரா இருங்க: விக்னேஷ் சிவனை எச்சரித்த ஷாருக்கான்

இதற்கிடையே ஜவான் படத்திற்காக நயன்தாரா சில பன்ச்சுகள், கிக்குகளை கற்றிருக்கிறார். அதனால் அவரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் என விக்னேஷ் சிவனை எச்சரித்துள்ளார் ஷாருக்கான். ஜவான் படத்தில் அட்லிக்கு ராசியான நயன்தாரா மட்டும் அல்ல ஷாருக்கானுக்கு ராசியான தீபிகா படுகோனும் நடித்திருக்கிறார். அவர் கவுரவத் தோற்றத்தில் வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.