சென்னை: பாக்கியராஜின் தாவணிக் கனவுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரியதர்ஷினி.
தொடர்ந்து, நடிகையாகவும் ஆங்கராகவும் சீரியல் நடிகையாகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார் பிரியதர்ஷினி. இவர் பிரபல ஆங்கர் டிடியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எதிர்நீச்சல் தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரியதர்ஷினி.
எதிர்நீச்சல் தொடரில் ரசிகர்களை கவர்ந்த விஷயம் குறித்து பேசிய பிரியதர்ஷினி: நடிகை பிரியதர்ஷினி குழந்தை நட்சத்திரமாக பாக்கியராஜின் தாவணிக் கனவுகள் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இந்தப் படம் கடந்த 1984ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து இதய கோயில், சுபயாத்ரா, கல்கி, புலி வருது போன்ற படங்களில் நடித்துள்ளார் பிரியதர்ஷினி. தொடர்ந்து நாயகியாகவும் ஆங்கராகவும் சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் பிசியாக இருந்து வருகிறார். மானாட மயிலாட, பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருது வாங்கினார்.
விஜய் டிவியின் முன்னணி ஆங்கரான டிடியின் அக்காவான பிரியதர்ஷினி, அவருக்கு முன்னதாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரது பல நிகழ்ச்சிகள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக உள்ளன. கடந்த 1998ம் ஆண்டில் ஒளிபரப்பான விழுதுகள் தொடரில் தான் முதன்முறையாக நடித்தார் பிரியதர்ஷினி. தொடர்ந்து சில தொடர்களில் நடித்துள்ள பிரியதர்ஷினி, அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார்.

திருமணத்திற்கு பிறகு ஆங்கரிங், சீரியல்கள் இவற்றிலிருந்து ஒதுங்கியிருந்த பிரியதர்ஷினி, தற்போது சன்டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்தத் தொடர் டிஆர்பியில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், பிரியதர்ஷினிக்கும் சிறப்பான என்ட்ரியாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் பிரியதர்ஷினி.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா போகும் பிரியதர்ஷினி அதன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். ரமணா என்பவரை திருமணம் செய்துள்ள பிரியதர்ஷினி, சமீபத்தில் தன்னுடைய மகனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவருக்கு தோளுக்கு மேல் வளர்ந்த மகன் இருப்பதை பார்த்த ரசிகர்களை ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.

எதிர்நீச்சல் தொடரில் இவரது மூக்குத்தி ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது. விதவிதமான பெரிய சைஸ் மூக்குத்திகளை இவர் அணிந்து வருகிறார். முன்னதாக ஆங்கராக இருந்தபோது, மூக்கு குத்தாமல்தான் இருந்தார் பிரியதர்ஷினி. தன்னுடைய 40வது வயதில்தான் தனக்கு மூக்கு குத்தும் ஆசையே வந்ததாகவும் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். தான் மூக்கு குத்தும்போது, அதைப்பார்த்த பலரும் நெகட்டிவ்வாகவே பேசியதாகவும் ஆனால் தனக்கு பிடித்திருந்ததால் தான் மூக்கு குத்திக் கொண்டதாகவும் பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
எம்எஸ் சுப்புலட்சுமி போல, பெரிய சைஸ் மூக்குத்திகளை அணிவது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் அந்த மூக்குத்திகள்தான் தற்போது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களையும் கவர்ந்துள்ளதாக பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் பிரியதர்ஷினி ஏற்று நடித்துவரும் ரேணுகா கேரக்டர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலின் சூட்டிங்கின்போது இவர் சாதாரணமாகவே நடிப்பதாக தோன்றும் என்றும் ஆனால் டப்பிங்கின்போது, அந்த காட்சியை சிறப்பாக்கிவிடுவார் என்றும் சக நடிகை காயத்ரி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பாராட்டு தெரிவித்துள்ளார்.