அமர்நாத் யாத்திரை குறித்து சிலிர்க்கும் சாய்பல்லவி

நடிகை சாய் பல்லவியை பொறுத்தவரை அது எவ்வளவு பெரிய நடிகர்கள் படம் என்றாலும் தனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கனமான கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறார். இதனால் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருக்கும் சாய்பல்லவி படப்பிடிப்பு இல்லாத நாட்களை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். குறிப்பாக ஆன்மிகத்தில் நாட்டம் உள்ள சாய்பல்லவி சமீபத்தில் அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று வந்துள்ளார் சாய்பல்லவி. உடன் அவரது பெற்றோரும் இந்த யாத்திரையில் பங்கெடுத்துள்ளனர்.

இந்த பயணம் மேற்கொண்டது குறித்து சிலிர்க்கும் சாய்பல்லவி, வயதான தன் பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு இந்த புனித யாத்திரையை மேற்கொண்டபோது அவர்களுக்கு ஏற்பட்ட மூச்சிரைப்பு, நெஞ்சு வலி, பனிப்பொழிவினால் ஏற்பட்ட சறுக்கல்கள் இவற்றையெல்லாம் நேரிட்டபோது கடவுளை நோக்கி எதற்காக இவ்வளவு தூரத்தில் இருக்கிறாய் என்று கேள்வி எழுப்பத் தோன்றியது என்று கூறியுள்ளார்.

அதே சமயம் நாங்கள் நல்லபடியாக தரிசனம் செய்து திரும்பி வந்தபோது பல பேர் தங்களது பயணத்தை முழுவதுமாக தொடர முடியாமல் பாதியிலேயே முடித்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. அப்போதுதான் என்னுடைய கேள்விக்கான விடையும் கிடைத்தது என்று இந்த பயணம் குறித்து சற்று விரிவாகவே சிலாகித்துக் கூறியுள்ளார் சாய்பல்லவி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.