சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் தடயவியல் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியில் அறையிலும் சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து கோட்டையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை பழைய வழக்கு விசாரணை காரணமாக, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம் சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையினர், தடயவியல் […]