சென்னை: நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் எல்லாம் ஓகே தான் ஆனால்,ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே என கேட்டு வருகின்றனர்.
சினிமா குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருந்ததால், தமிழ் ஆடியன்சுக்கு பிடித்தமாதன நடிகையாக மாறினார்.
அடுத்தடுத்த படங்களில்: மாளவிகா மோகனன் அறிமுகமான முதல் படமாக ரஜினி காந்த் படம் என்பதால், அடுத்து, விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு ,இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி படத்தின் நடிகர் மேத்யூ தாமஸ் இணைந்து நடித்திருந்தார்.

தங்கலான்: தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் கோலார் தங்க வயல்களில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பீரியட் திரைப்படமான இப்படத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோடு, பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அதிகரிக்கும் எதிர்பார்ப்பு : இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்த இப்படத்தின் மீதான எதிர்ப்பு பல மடங்கு அதிகரித்து வந்த நிலையில், விக்ரமனின் பிறந்த நாளுக்கு தங்கலான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இந்த படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து எலும்புக்கூடாக மாறி இருக்கிறார்.
ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே: தற்போது இவர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், கலைநயம் என்பது பொருட்களுக்கு மட்டும்தானா? இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது அவர்களின் வாழ்க்கைக்கோ கலைநயம் என்பது கிடையாதா? எனக்கூறி புடவையில் வித்தியாசமான இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்டத்தை பார்த்த பேன்ஸ் எல்லாம் ஓகே தான். ஆனால்,ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே என தங்களது கமெண்டுகளை அவரின் புகைப்படத்திற்கு கீழே பகிர்ந்து வருகின்றனர்.