சந்திரயான் 3: இரண்டாவது சுற்றுவட்டப் பாதையும் சக்சஸ்… இஸ்ரோ சொன்ன ஹேப்பி நியூஸ்!

சந்திரயான் 3 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா? எனக் கேள்வி எழலாம். இதற்கான பதிலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சற்றுமுன் உறுதி செய்துள்ளது. அதாவது, இரண்டாவது சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் 3 செயற்கைக்கோளை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. விண்கலம் தற்போது 41,603 கிலோமீட்டர் x 226 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் இருக்கிறது. இந்த சுற்றுவட்டப் பாதையை மேலும் உயர்த்தும் பணி நாளை பிற்பகல் 2 முதல் 3 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.