சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தனது படங்களில் இளம் நடிகைகளுக்கு வாய்ப்புக் கொடுத்து வருகிறார். ஹீரோ படத்தில் இவானாவுக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுத்த நிலையில், லவ் டுடே படத்தில் ஹீரோயினாக மாறி மாஸ் காட்டி விட்டார்.
அதே போல டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு சான்ஸ் கொடுத்திருந்தார்.
ஆனால், அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் மாவீரன் படத்தில் மோனிஷா பிளெஸ்ஸி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கலக்கி விட்டார் என்றும் ரசிகர்கள் மீம் போட்டு மோனிஷா பிளெஸ்ஸியை கொண்டாடி வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் தங்கை: இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு மற்றும் சரிதா நடித்த மாவீரன் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த மோனிஷா பிளெஸ்ஸியின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ மூலம் சிவாங்கி எப்படி பிரபலமானாரோ அதே போல பிரபலமான மோனிஷா பிளெஸ்ஸிக்கு தனது மாவீரன் படத்தின் மூலம் வாய்ப்புக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

உணர்ச்சிவசப்பட்ட மோனிஷா: தியேட்டரில் தான் நடித்த மாவீரன் படத்தை பார்த்த மோனிஷா பிளெஸ்ஸி தனது காட்சிகளை பார்த்து தியேட்டரிலேயே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்திய போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி டிரெண்டாகின.
இந்நிலையில், மோனிஷாவின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருவதுடன் சிவாங்கியை கம்பேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

சிவாங்கி – மோனிஷா மீம்: “உன்னைவிட அவ நல்லா ஆக்ட் பண்றா என மீம் போட்டு மோனிஷா பிளெஸ்ஸியின் நடிப்பை பாராட்டியும், சிவாங்கியை ட்ரோல் செய்தும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சோஷியல் மீடியாவில் சிவாங்கிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், டான் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் திறம்பட பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் சரியாக சிவாங்கி நடிக்கத் தொடங்கினால் மிகப்பெரியளவில் காமெடி நடிகையாக மாறும் அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு உண்டு என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.