Jailer: படம் கண்டிப்பா ஹிட் தான்..மகிழ்ச்சியில் அனைவர்க்கும் டபுள் சம்பளம் கொடுத்த ரஜினி..!

தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருகின்றார் ரஜினி. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின்பு வில்லனாக மிரட்டி அதன் பிறகு ஹீரோவாக அவதாரம் எடுத்தார் ரஜினி. இவர் ஹீரோவாக நடிக்க துவங்கியது தான் இவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இவர் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் மெகாஹிட் வரிசையில் இடம்பெற விரைவில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடைந்தார். அதன் பிறகு அந்த சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை தக்கவைக்க கடந்த நாற்பது ஆண்டுகளாக உழைத்து வருகின்றார் ரஜினி.

ரஜினியின் மனசு

இந்நிலையில் சமீபகாலமாக ரஜினியின் படங்கள் என்னதான் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும் ரஜினியின் மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. இன்றும் அவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

Jailer: ரசிகர்களின் கவனத்திற்கு…ஜெயிலர் படம் பார்க்க இப்படி தான் வரணுமாம்..!

அந்த வகையில் தற்போது நெல்சனின் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாக இருக்கின்றது. மேலும் ஜெயிலர் படத்தை போட்டுப்பார்த்த ரஜினிக்கு முழு திருப்தி ஏற்பட்டதாகவும், கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் ரஜினி இருப்பதாக தகவல் வந்தது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் ரஜினியை பற்றி ஒரு தகவல் கூறியுள்ளார். அதைக்கேட்ட ரசிகர்கள் ரஜினியை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதாவது ரஜினியின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான் படையப்பா. இப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினியே தயாரித்திருந்தார்.

பாராட்டும் ரசிகர்கள்

இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய தேனப்பன் கூறியதாவது, படையப்பா படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் ரஜினி என்னை அழைத்தார். நானும் அவரின் வீட்டிற்கு சென்றேன். அப்போது என் கையில் ஒரு லிஸ்ட் கொடுத்து பணத்தையும் கொடுத்து, படையப்பா படத்தில் நடித்த நடிகர்கள் அனைவர்க்கும் அவர்கள் வாங்குன சம்பளத்தை அப்படியே டபுளாக கொடுக்க சொன்னார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

படம் கண்டிப்பா ஹிட் அடிக்கும் என கணித்த ரஜினி நடிகர்கள் முதல் அப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவர்க்கும் டபுள் சம்பளம் கொடுத்தார் என்றார் தேனப்பன்.

இந்நிலையில் இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ரஜினியை பாராட்டி வருகின்றனர்.

இதையடுத்து ரஜினி பாபா என்ற படத்தை நடித்து தயாரித்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.எனவே பாபா படத்தினால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை அழைத்து அவர்களுக்கு நஷ்டஈடு கொடுத்தார் ரஜினி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.