சென்னை: மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு ஜோடியாக யூடியூப் பிரபலம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற சேனலை நடத்தி வரும் டிடிஎஃப் வாசனை 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, வீலிங் செய்து இன்றைய சிறுவர்களுக்கு இளைஞர்களுக்கும் தவறான முன் உதாரணமான இருக்கும் டிடிஎஃப் வாசன் மீது சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.
டிடிஎஃப் வாசன்: யூடியூப் சேனல் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன், கடந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் ஒன்றில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து பொதுமக்களே மிரண்டு போனார்கள். அந்த அளவுக்கு தளபதி விஜய் ரேஞ்சுக்கு அலப்பறை கொடுத்திருந்தார். இதையடுத்து, இணையத்தில் டிடிஎஃப் வாசன் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது.
பல வழக்குகள்: இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் டிடிஎஃப் வாசன் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதன் பின்னர் அனுமதிக்கப்பட்ட அளவை விட சாலையில் அதிவேகமாக பைக்கை ஓட்டியது, ஜிபி முத்துவை பைக்கில் உட்காரவைத்து 150 கிமீ வேகத்தில் சென்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டன.
மஞ்சள் வீரன்: இந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் பிறந்த நாளில் அவர் நடிக்கவுள்ள மஞ்சள் வீரன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் இந்தப் படத்தை செல்அம் என்பவர் இயக்குகிறார். இந்த பட அறிவிப்பு வெளிவந்த உடன் படம் குறித்து பலவிதமான மீம்ஸ்கள் இணையத்தில் பரவியது. மேலும், மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு ஜோடியார் என்று ரசிகர்கள் கேட்டுவந்தனர்.
அமலா ஷாஜி: இந்த நிலையில் அவருக்கு ஜோடியாக மற்றொரு யூடியூப் பிரபலமான அமலா ஷாஜி நடிக்க வாய்ப்பு இருப்பாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதற்கான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.