Maaveeran: சிவகார்த்திகேயனின் இந்த மனசு வேறு யாருக்கு வரும்..மாவீரன் தயாரிப்பாளரின் நெகிழ்ச்சியான பதிவு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி பயணித்து வருகின்றது. மண்டேலா என்ற படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை வெளியான சிவகார்திகேயனின் படங்களிலேயே மாவீரன் திரைப்படம் வித்யாசமாக இருப்பதாக ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

எப்போதும் கலகலவென ஜாலியாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே இப்படத்தின் ஹைலைட்டான விஷயமாக அமைந்தது. இதையடுத்து யோகி பாபுவின் காமெடி, மிஸ்கின், அதிதி ஷங்கர், சரிதா ஆகியோரின் நடிப்பு என படத்தில் அனைத்தும் சிறப்பாக அமைய இப்படம் இதுவரை ஐம்பது கோடி வரை வசூலித்துள்ளது.

Thalaivar 171: தலைவர் 171 படப்பிடிப்பு முதல் ரிலீஸ் தேதி வரை..வெளியான வெறித்தனமான அப்டேட்..!

இதே நிலையில் தொடரும் பட்சத்தில் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் அதிக வசூலை ஈட்டிய படமாக மாவீரன் உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் மாவீரன் படத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா தற்போது உருக்கமான ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் தான் காரணம்

அதில் அவர் கூறியதாவது, நான் ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய போது இதுபோன்ற ஒரு மிகப்பெரிய படத்தை தயாரிப்பேன் என கனவில் கூட நினைத்ததில்லை. அனைத்தும் கனவு போல உள்ளது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தந்த அன்பிற்கு ஒரு அளவே இல்லை. இதெல்லாம் சிவகார்த்திகேயன் என்ற ஒரு நபரால் தான் நிகழ்ந்தது.அவர் இல்லை என்றால் மாவீரன் நடந்திருக்காது.

சிவகார்த்திகேயன் போன்ற ஒரு நண்பர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என மிகவும் உருக்கமாக பேசினார் அருண் விஸ்வா. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே முன்பதிவாக பெற்றுக்கொண்டாராம்.

நெகிழ்ச்சியாக பேசிய தயாரிப்பாளர்

மேலும் மாவீரன் படத்தின் விழாவில் பேசிய அருண் விஸ்வா, சிவகார்த்திகேயன் தனக்கு பல உதவிகளை தயங்காமல் செய்துள்ளார் என்று மிக உருக்கமாக பேசினார். இதையடுத்து தற்போது மாவீரன் தயாரிப்பாளர் அருண் விஸ்வாவிற்கு பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.