சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இடத்தில் டாட்டூ குத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கருப்பா இருந்தாலும், எடுப்பான தனது அழகால் ரசிகர்களை வசியம் செய்தவர் சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. கன்னட நடிகையான இவரை முதன் முதலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் பார்த்த அனைவரும் இவரின் தீவிர ரசிகர்களாக மாறிவிட்டனர்.
முதல் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து,சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரில் நடித்தார். இந்த சீரியலுக்கும் மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.
சரவணன் மீனாட்சி சீரியல்: இதை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி இரண்டாவது 2 தொடரில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் பொருத்தமான ஜோடி என்று சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்டிரி இருந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில்: இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரச்சிதா மகாலட்சுமி சிறப்பாக விளையாடி பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை இருந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். இதையடுத்து, அண்மையில் தனது கணவர் தினேஷ் ஆபாசமாக பேசுவதாக கூறி கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வெறும் மனக் கசப்புடன் பிரிந்து இருந்த இவர்கள் இப்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதெல்லாம் தேவையா: இந்நிலையில், இணையத்தில் 1.4 மில்லியன் பாலோவர்களை வைத்திருக்கும் ரச்சிதா மகாலட்சமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆந்தையின் உருவத்தை நெஞ்சில் டாட்டூ போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆந்தை உருவ டாட்டூக்கு என்ன அர்த்தம் என்றும், இதெல்லாம் தேவையா என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.