ரெட் ஆரஞ்ச் அலர்ட்ஸ்… மும்பையில் கொட்டித்தீர்க்கும் கனமழை… பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… திணறும் மெட்ரோ சிட்டி!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழையின் தீவிரத்தை தொடர்ந்து வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஹிமாச்சல், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், சண்டிகர், பீகார், ஓடிசா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா டெல்லி என பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
​ அடுத்த குறி உதயநிதிக்கா? ஹெச் ராஜா பரபரப்பு தகவல்!​யமுனை வெள்ளம்வடமாநிலங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாயகட்டத்தை தாண்டி சென்றதால், தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் சாலைகளிலும் ஒரு ஆள் உயரத்திற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் டெல்லி மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிரமத்தை சந்தித்தனர்.​ அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்து ஸ்டாலினை சந்தித்த பொன்முடி… நடந்தது என்ன?​
இன்று ரெட் அலர்ட்யமுனை ஆற்றின் நீர்மட்டம் தற்போதுதான் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
​ திருப்பதி பக்தர்களே… ஆகஸ்ட் மாதத்தில் வரும் மிகப்பெரிய மாற்றம்… மிஸ் பண்ணிடாதீங்க!​திணறும் மும்பைசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றுமு ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவத்துள்ளது. மேலும் தானே, மும்பை, புனே மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பையின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
​ அமலாக்கத்துறை ரெய்டில் அடுத்து சிக்கப் போவது யார்? ஹெச் ராஜா கொடுத்த ஹின்ட்!​இயல்பு வாழ்க்கை பாதிப்புராய்காட், புனே, தானே, பால்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குஜராத், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் கேரளா உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிமேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது என்றும், இதன் காரணமாக மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் பருவமழை தீவிரம் அடையும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இந்த அமைப்பு ஜூலை 18 ஆம் தேதி கரையோரமாக அல்லது நிலப்பகுதியயை நோக்கி நகரும் போது, மும்பை மற்றும் கொங்கன் அருகிலுள்ள பகுதிகள் பருவமழை மீண்டும் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.அடுத்த 2 நாட்கள்அடுத்த இரண்டு நாட்களுக்கு ஜம்மு காஷ்மீர், லடாக், மேற்கு ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள்துறை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.