Vijay: அஜித் விஷயத்தில் நிறுத்துங்க, ரஜினி விஷயத்தில் இதை செய்ங்க: ரசிகர்களுக்கு விஜய் உத்தரவு?

Vijay Makkal Iyakkam: அரசியலுக்கு வர தயாராகிக் கொண்டிருக்கும் விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவிட்டிருக்கிறாராம்.

​விஜய்​விஜய் அரசியலுக்கு வர வேண்டும், தமிழக முதல்வராக வேண்டும் என்பது அவர் ரசிகர்களின் விருப்பம். அரசியலுக்கு வர இத்தனை ஆண்டுகளாக ஆழம் பார்த்துக் கொண்டிருந்தார் விஜய். இந்நிலையில் அரசியலிலும் ஒரு கை பார்த்துவிடலாம் என முடிவு செய்திருக்கிறாராம். பனையூரில் இருக்கும் அலுவலகத்தில் வைத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்பொழுது முக்கிய உத்தரவிட்டிருகிறாராம்.

​Abbas: வேகமாக வரும் வாகனம் முன்பு குதித்து தற்கொலை செய்ய நின்ற நடிகர் அப்பாஸ்உதயநிதி​உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…​​அஜித்​234 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து பேசியிருக்கிறார் விஜய். சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் அஜித் குமாரை தாக்கிப் பேசுவதும், பதிலுக்கு அவர்கள் தளபதியை விளாசுவதும் வழக்கமான விஷயமாகிவிட்டது. இந்நிலையில் தான் இனி யாரும் அஜித் குமாரை தாக்கிப் பேசக் கூடாது என்று ரசிகர்களிடம் கறாராக கூறியிருக்கிறாராம் விஜய்.

​ரஜினி​விஜய்க்கு என்ற சமூக வலைதளத்தில் ஒரு டீம் இருக்கிறது. அந்த டீம் இனி அஜித் குமாரை சீண்டவே கூடாது என்பது தான் விஜய்யின் உத்தரவாம். மேலும் ரஜினியை விட விஜய் பெரிய ஆள் எனும் பிம்பத்தை உருவாக்க வேண்டும் என கூறியிருக்கிறாராம் தளபதி. இளைஞர்கள் மத்தியில் தன் பெயர் பெரிய அளவில் ரீச் ஆக வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

​சூப்பர் ஸ்டார்​Keerthy Suresh: நயன்தாராவை அடுத்து கீர்த்தி சுரேஷை பாலிவுட் அழைத்துச் செல்லும் அட்லிஅஜித் மட்டும் அல்ல ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. சூப்பர் ஸ்டார் விஜய் தான் என தளபதி ரசிகர்கள் கூற, எப்பொழுதும் ஒரே சூப்பர் ஸ்டார் தான், அது எங்கள் தலைவர் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியை விட தான் பெரிய ஆள் என்கிற பிம்பத்தை உருவாக்குமாறு விஜய் உத்தரவிட்டுள்ளார் என்கிற தகவல் தலைவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

​இரவு பாடசாலை​காமராஜரின் பிறந்தநாள் அன்று தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஊர்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலை திறக்கப்பட்டது. அந்த பாடசாலையில் மாணவர்கள் படிக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாத யாத்திரை சென்று மக்களை சந்திக்கவிருக்கிறார் விஜய் என கூறப்படுகிறது.
​தேர்தல்​2026ம் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து செயல்படுகிறாராம் விஜய். தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் தளபதி 68 படத்துடன் நடிப்பில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்து அரசியல் வேலையில் ஈடுபடப் போகிறார் என தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என விஜய் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

7

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.