சூரத் நகரில் பிரம்மாண்ட கட்டடம்… மாஸாகும் வைர பிஸினஸ்… 4500 ஆபிஸ், 67 ஆயிரம் பேருக்கு வேலை!

உலக நாடுகள் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் வைக்காமல் அவ்வப்போது ஆச்சரியமூட்டும் கட்டிடங்களை கட்டி வருகின்றன. தற்போதைய சூழலில் உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்றால் அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் அந்நாட்டு பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகமாக இருக்கும் பென்டகன் தான். இது மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் சாதனையை முறியடிக்கும் வகையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

சூரத் வைர வியாபாரம்சூரத் என்றால் வைர வியாபாரம் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். எனவே இந்த தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய பிரம்மாண்டத்தை கட்டமைத்துள்ளனர். 6.7 மில்லியன் சதுர அடியில் கட்டிடம் அமைந்திருக்கிறது என்றால் சும்மாவா? இது மட்டும் திறக்கப்பட்டால் பென்டகன் அலுவலகம் ஓரங்கட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் சூரத் இடம்பெறும்.​பிரம்மாண்ட வைரச் சந்தைபுதிதாக கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட கட்டிடத்திற்கு சூரத் வைரச் சந்தை (Surat Diamond Bourse) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது 3,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருவது ஆச்சரியம் அளிக்கிறது. இதனை மோர்போஜெனிசிஸ் என்ற கட்டிடக் கலை நிறுவனத்தின் இணை நிறுவனர் மனித் ரஸ்தோகி வடிவமைத்திருக்கிறார். இதன் மேற்பகுதியை பார்த்தால் 9 தனித்தனி கட்டிடங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருப்பதை போல இருக்கும்.
ஸ்பைன் காரிடார் வசதிஇந்த இணைப்பில் 24 அடி அகலம் கொண்ட ஸ்பைன் காரிடார் அமைந்துள்ளது. இது காற்றை வடிகட்டி உள்ளே அனுப்பும் வகையில் கட்டுப்பட்டுள்ளது. மேலும் உட்புற வெப்பநிலையை குறைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டிடமும் 15 மாடிகள் கொண்டது. இதன் அடிப்பகுதியில் 2 மில்லியன் சதுர அடியில் பார்க்கிங் செய்யும் வசதி இடம்பெற்றுள்ளது. இந்த வளாகத்தில் உயர்மட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
​மொத்தம் 4,500 அலுவலகங்கள்சிசிடிவி, கட்டுப்பாட்டு அறைகள், பொது அறிவிப்பு வெளியிடும் தொழில்நுட்ப வசதிகள், ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் பாதுகாப்பு அம்சங்கள், கார் ஸ்கேனர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மொத்தமாக 4,500 அலுவலகங்கள் செயல்படும். மேலும் பாதுகாப்பு பெட்டகங்கள், கூட்ட அரங்குகள், பல்முனை அரங்குகள், உணவகங்கள், வங்கிகள், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் அலுவலகங்கள், கண்காட்சி அரங்குகள், பயிற்சி மையங்கள், பொழுதுபோக்கு பகுதிகள், கிளப்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
களைகட்டும் வைர வியாபாரம்இதன்மூலம் 67 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத் வைரச் சந்தையில் உள்ள கட்டிடங்களை வைர வியாபாரிகள், வைரம் வெட்டும் தொழிலாளர்கள், வைரம் பாலிஷ் செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தி கொள்வர். இதன் ஒவ்வொரு அலுவலகமும் 300 முதல் 7,500 சதுர அடி வரை பரப்பளவை கொண்டிருக்கும்.
​பிளாட்டினம் அந்தஸ்துஇவ்வளவு சிறப்புகள் கொண்ட சூரத் வைரச் சந்தை பிரம்மாண்டத்திற்கு பிளாட்டினம் அந்தஸ்தை இந்திய கிரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) அளித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கின. பின்னர் இயல்பு நிலை திரும்பியதும் பணிகள் வேகமெடுத்தன.​வரும் நவம்பரில் திறப்பு விழாதற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டாலும் திறப்பு விழாவிற்கு இன்னும் 4 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் நவம்பர் 21, 2023ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளனர். உலக சாதனை படைக்கப் போகும் பிரம்மாண்ட கட்டிடத்தை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.