போலி கணவன் – மனைவி ; ரன்பீர் – ஆலியா பட் மீது கங்கனா மறைமுக தாக்கு

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் ஆலியா பட்டும் கிட்டத்தட்ட கீரியும் பாம்பும் போல எதிரெதிர் துருவத்தில் இருப்பவர்கள். இதில் குறிப்பாக அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை உதிப்பதற்கு பெயர் போன கங்கனா தான், ஆலியா பட்டை ஏதாவது சீண்டிக்கொண்டே இருப்பார். காரணம் ஆலியா பட் நெப்போடிசத்தால் உருவாக்கப்பட்டவர் என்பதும் அவரால் பலரது வாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன என்பதும் கங்கனாவின் கோபத்திற்கு காரணம். இந்த நிலையில் தற்போது ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் இருவர் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார் கங்கனா ரணாவத்.

இதுகுறித்து கங்கனா வெளியிட்டிருந்த பதிவில், “ஆலியா பட், ரன்பீர் கபூர் இருவரும் போலியான ஜோடி. இவர்கள் பப்ளிசிட்டிக்காகவும் பணத்திற்காகவும் செய்து கொண்ட திருமணம் இது. ஒரு மாபியா தந்தையின் (மகேஷ் பட்) விருப்பத்திற்காக, அவர் கொடுத்த அழுத்தம் மற்றும் வாக்குறுதி காரணமாக இவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டி இருந்தது.

சமீபத்தில் மனைவியையும் குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு குடும்பத்துடன் லண்டன் ட்ரிப் வந்திருந்த அந்த கணவர், என்னை சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என எனக்கு மெசேஜ் அனுப்பினார். இந்த ஜோடி நிச்சயம் வெளியே காட்டப்பட வேண்டும். இருவரும் தனித்தனி தளங்களில் வசித்து வருகின்றனர். பணத்திற்காக திருமணம் செய்தால் இப்படித்தான். ஆனால் வேறு வழி இல்லை. அவர் தனது மனைவி, மகளிடம் தான் கவனத்தை செலுத்த வேண்டும். இது இந்தியா.. இங்கே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் பண்பாடு” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எந்த இடத்திலும் அவர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரின் பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு முறை ஆலியா பட்டின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் கங்கனா ரணாவத் இதுபோன்று ஆலியா பட் மீது தனது கோபத்தை வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.