கமல்ஹாசனை புகழ்ந்த அமிதாப்பச்சன்

அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் நடக்கும் காமிக் கான் விழாவில் 'கல்கி 2898 எடி' படத்தின் அறிவிப்பு, வீடியோ முன்னோட்டம் ஆகியவை வெளியிடப்பட்டன. நிகழ்வில் படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின், பிரபாஸ், கமல்ஹாசன், ராணா டகுபட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய கமல்ஹாசன், “இது போன்ற ரசிகர்களுடன் அமர்ந்து, அமித்ஜி நடிப்பதை, பிரபாஸ், ராணா நடிப்பதை பார்க்கும் போது, நீங்கள் நிஜமாகவே உணர வேண்டும். இப்படி ஒரு எனர்ஜியுடன் வாழ்வதைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது,” என்றார்.

நிகழ்வில் வீடியோ மூலம் கலந்து கொண்ட அமிதாப்பச்சன் உடனடியாகக் குறுக்கிட்டு, “மிகவும் அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். எங்கள் அனைவரையும் விட நீங்கள் சிறந்தவர்,” என்றார். அவரது பதிலைக் கேட்டு மேடையில் இருந்தவர்களும், அரங்கத்தில் இருந்தவர்களும் ரசித்து சிரித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.