கிருபாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பட்டியல் என்னிடம் இருக்கிறது : விக்ரமன்

பிக்பாஸ் விக்ரமன் தன்னை காதலித்து பண மோசடி செய்ததாக கிருபா முனுசாமி கூறியதையடுத்து விக்ரமனும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார். இருப்பினும் பலர் விக்ரமனுக்கு எதிராக விமர்சனங்களை வைத்து வந்த நிலையில், தற்போது தனது பக்க விளக்கத்தை விரிவாக பேட்டியாக அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், 'கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். அந்த சமயம் நட்பு ரீதியில் நான் அவரிடம் பணம் வாங்கியிருந்தேன். அப்படி வாங்கிய பணத்தையும் என்னிடம் பணம் இருக்கும் போதெல்லாம் திருப்பி கொடுத்துவிட்டேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. சொல்லப்போனால் நான் அவரிடமிருந்து வாங்கியதை விட 50 ஆயிரம் ரூபாய் அதிகமாகத்தான் கொடுத்திருக்கிறேன். அவர்தான் இப்போது எனக்கு காசு தரவேண்டும். எனவே, என்மீது அவர் பணமோசடி புகார் சொல்ல முடியாது.

நான் எமோஷ்னல் டார்ச்சர் செய்ததாக சொல்கிறார். ஆரம்பித்தில் நட்பாக பழகிய அவர் திடீரென வேறுவிதமாக நடந்து கொண்டார். பின் அவர் என்னிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார். நான் அப்படியெல்லாம் உங்களுடன் பழகவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால், அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் பிடிக்கவில்லையென்றால் பிரிந்துவிடலாம் என்று சொன்னார். அதன்பிறகு நான் அவரை விட்டு விலக ஆரம்பித்தேன். இதனால் என் மீது ஏற்பட்ட கோபத்தினால் தான் இப்படியெல்லாம் செய்கிறார்.

நான் வேறு சில பெண்களை ஏமாற்றிவிட்டதாக சொல்கிறார். உண்மையில் கிருபாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. அவர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயாராயிருக்கிறேன். அறம் வெல்லும்' என்று விக்ரமன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.