சென்னை: அறிமுகமான மொழிப் படங்களையே உதாசினப்படுத்த தொடங்கிய நடிகைக்கு தற்போது அவர் ஆசை ஆசையாக சென்ற இடத்திலேயே மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.
தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததுமே அம்மணிக்கு தனியாக ரெண்டுக்கு நாலு கொம்பு முளைத்து விட்டதாம்.
ஒவ்வொரு ஸ்டேட்டையும் மட்டம் தட்ட ஆரம்பித்த அந்த நடிகை ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவையே உதாசினப்படுத்த ஒரு கட்டத்தில் ஆரம்பித்து விட்டார்.
திமிர் ஏறிப்போச்சு: பெரிய நடிகர்கள் தனது கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர் என்பதை அறிந்துக் கொண்ட நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மற்ற தென்னிந்திய நடிகைகளை விட அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்ய ஆரம்பித்ததும் திமிர் பிடித்த நடிகையாகவே மாறிவிட்டாராம்.
தயாரிப்பாளர்கள் காசுல தாராளம்: தன்னை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் காசை வைத்தே வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஜாலி டூர் அடிப்பது, சொகுசு ஹோட்டல்களில் காஸ்ட்லி சூட் ரூமில் தங்குவது, தனது நண்பர்களுக்கும் சேர்த்து ஃபிளைட் டிக்கெட் புக் செய்வது என ஓவர் ஆட்டம் போட்டு வந்துள்ளார்.
தென்னிந்தியாவையே டம்மியாக்கி: மேலும், பெரிய ஸ்டார் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை வைத்துக் கொண்டு அப்படியே பாலிவுட்டில் நுழைய ஆரம்பித்த அந்த நடிகை பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் சிலருடன் ஒரு சில படங்களில் இணைந்து நடித்ததுமே ஓவர் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டாராம்.
அதன் விளைவாக தென்னிந்திய மொழிப் படங்கள் எல்லாமே சுத்த வேஸ்ட், ஒரே மசாலா குப்பை என பாலிவுட்டில் சம்பாதிக்க வளர்த்து விட்ட தென்னிந்தியாவை டேமேஜ் செய்து வந்தார். ஆனால், பாலிவுட்டிலேயே தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து தான் தற்போது பிழைப்பே ஓடுகிறது என்பது அம்மணிக்கு லேட்டாகத்தான் புரிந்திருக்கிறது.

பறிபோன வாய்ப்பு: ஓவர்சீன் உடம்புக்கு ஆகாது என்பது போல நடிகை பாலிவுட்டிலும் சென்று பந்தா காட்டியதை பார்த்த தயாரிப்பாளர்கள் சிலர், நடிகையை பற்றிய விஷயங்களை கசிய விட சமீபத்தில், அந்த நடிகைக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு அப்படியே கைமாறி போய் நீண்ட காலமாக பாலிவுட் படத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த அந்த அவார்டு பட நடிகைக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர்.
மேலும், கைவசம் உள்ள ஒரே ஒரு பாலிவுட் படத்தை தவிர அந்த நடிகைக்கு எங்கேயும் பட வாய்ப்புகளே இல்லாத நிலை உருவாகி விட்டதும் அழுது புலம்ப துவங்கி விட்டாராம் அந்த நடிகை என தகவல்கள் கசிந்துள்ளன.