ஸ்டாலின் எடுக்கும் ரிவெஞ்ச்: ஆப்பரேஷன் வேலுமணி – பாயத் தயாராகும் திமுக அரசு!

திமுகவை குறிவைத்து அமலாக்கத்துறை தமிழகத்தில் களமாடி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமானியை அடுத்தடுத்து விசாரித்து வரும் நிலையில் அடுத்து எந்த திமுக அமைச்சர் வீட்டுக்குள் அமலாக்கத்துறை இறங்கும் என்ற பதற்றம் திமுக வட்டாரத்தில் நிலவுகிறது.

திமுகவினரை உஷார் படுத்திய ஸ்டாலின்மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்கட்சிகளை எப்படியாவது மிரட்டி தங்கள் வழிக்கு கொண்டு வரவேண்டும், அல்லது ஏதேனும் நெருக்கடி கொடுத்து முடக்க வேண்டும் என்று பாஜக நினைத்து வருகிறது. அதனால் ரெய்டு, விசாரணை, கைது ஆகியவற்றை திமுக ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். அதை சட்டரீதியாக எதிர்கொண்டு வழக்கை உடைக்கும் வரை சோர்ந்து போகாமல் செயலாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் அணியினரிடமும் கூறியுள்ளார் ஸ்டாலின்.
மோடி சீண்டல் – ஸ்டாலின் கோபம்!எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் திமுக முக்கிய பங்கு வகிக்கும் வகையில் திமுகவின் பெயரை பஞ்சராக்கும் வகையில் ஊழல் கட்சி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பிரதமரே பேசிவிட்டார், நாம் சும்மா இருக்கலாமா என்று எடப்பாடி பழனிசாமியும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். இருவரது விமர்சனமும் ஸ்டாலினை கோபமாக்கியுள்ளதாம். பொறுமையாக தடுத்தாடுவது இனி வேலைக்கு ஆகாது, அதிரடியாக அடித்தாடினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து தனது வேகத்தை கூட்டியுள்ளாராம்.
அதிமுகவுக்கு குறி!திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத விமர்சனங்கள் மெல்ல மேலெழுந்து வரும் நிலையில் அதை உடனடியாக மாற்ற வேண்டும். அதிமுகவை இவ்வளவு தூரம் பேச அனுமதித்திருக்க கூடாது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார் ஸ்டாலின். அதனால் லஞ்ச ஒழிப்புத்துறை இனி அதிரடியாக சில சம்பவங்களை அரங்கேற்றும் என்கிறார்கள்.
செந்தில் பாலாஜியை வளைத்தது ஏன்?செந்தில் பாலாஜியை முதல் ஆளாக குறி வைத்ததே அவர், தீவிரமாக தேர்தல் வேலை பார்க்கிறார், கொங்கு மண்டலத்தில் குறுகிய காலத்தில் கட்சியை பலப்படுத்துகிறார் என்பது தானாம். அவரை தூக்கினால் கொங்கு மண்டலத்தில் திமுக மீண்டும் பலவீனமாகும் என்பது டெல்லியின் கணக்கு. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவின் முக்கிய கொங்கு புள்ளியை தூக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு ஸ்கெட்ச்!அதிமுகவைப் பொறுத்தவரை கொங்கு மண்டலம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கு நீண்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு அவர் தான் ஸ்வீட் பாக்ஸ் விநியோகம் செய்துள்ளார். அதிமுக சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் வேலுமணி பெயரை உச்சரித்து பதவியேற்றது நினைவிருக்கலாம். அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த எஸ்.பி.வேலுமணியை வளைத்துவிட்டால் அதிமுகவும், பாஜகவும் கரையேற முடியாது.
ஸ்டாலின் அதிரடி ஆட்டம்!​​
ஏற்கனவே அவரை குறிவைத்து ரெய்டுகள் நடந்த போதும் அதில் எதிலும் சிக்காமல் தப்பித்த வேலுமணி இந்த முறை மாட்டுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திமுக உடன்பிறப்புகள். ‘அவர் இருக்க பயமேன்’ என்று சென்னை கிண்டியை நோக்கி கும்பிடுகின்றனர் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள். ஸ்டாலின் அடித்து ஆடத் தொடங்கிவிட்டதால் சிக்ஸ்ர் பறக்குமா அல்லது விக்கெட் பறிபோகுமா என்று தெரியாது. ஆனால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.