அலர்ட் ஆன மு.க.ஸ்டாலின்… சொல்பேச்சு கேட்குமா திமுக கேபினட்? தேர்தலும், நம்பர் அரசியலும்!

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது பலருக்கும் தெரிந்திருக்கும். கூட்டம் தொடங்கியதும் நிர்வாக ரீதியில் சில விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டன. இல்லத்தரசிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

​தமிழக அமைச்சரவை கூட்டம்இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு அமைச்சர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அனைத்து அமைச்சர்களையும் ஒரே இடத்தில் சந்திக்கக் கூடிய இடமாக அமைச்சரவை கூட்டம் தான் இருக்கிறது. எனவே வெளிப்படையாக சில விஷயங்களை பேசிவிடலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.மு.க.​ஸ்டாலின் அறிவுரைமுதலில் கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட நிர்வாகிகள், அரசு தரப்பில் இருந்து டெண்டர் பெற்றவர்கள் ஆகியோரிடம் சச்சரவில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். தேவையற்ற விஷயங்களால் உட்கட்சி பூசலை விஸ்வரூபம் எடுக்க வைத்து விடாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.
ரெய்டு சர்ச்சைகள்இரண்டாவது ரெய்டு விவகாரம். எந்த ஒரு டீலிங்கிலும் கணக்கு வழக்குகளை கச்சிதமாக மேற்கொள்ளுங்கள். ஆவணமாக சிக்கி தவறாக புரிந்து கொள்ளும்படி செய்து விடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார். மூன்றாவதாக மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு சில அறிவுரைகள். அமைச்சர்கள் பணி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்தது. அது கட்சியாக இருந்தாலும் சரி. ஆட்சியாக இருந்தாலும் சரி.​மக்களவை தேர்தல் வியூகம்விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. எனவே பொறுப்பு அமைச்சர்கள் சரியான முறையில் வேலைகளை முன்னெடுக்க வேண்டும். வேலை சரியில்லை எனத் தகவல் வந்தால் அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரித்தார். நான்காவதாக அமைச்சர்கள் தங்களின் துறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல சிறப்பான விஷயங்களை கையாள வேண்டும்.​துறை சார்ந்த செயல்பாடுகள்ஆட்சி இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் புதிய சச்சரவுகளுக்கு இடம் தராத வகையில் வேலை செய்யுங்கள். ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளையும் குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணிப்பேன் எனவும் மு.க.ஸ்டாலின் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. ஸ்டாலினை பொறுத்தவரை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை பின்னடைவாக பார்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
​அமைச்சர் பொன்முடிக்கு செக்எனவே மீண்டும் ஒரு அமைச்சர் சிக்கி மக்களவை தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடாது எனக் கருதுகிறார். எனவே தான் அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு, விசாரணை என வந்த போது சட்ட வல்லுநர்களை அலர்ட்டாக இருக்குமாறு அவசர உத்தரவை பிறப்பித்தார்.
​அமலாக்கத்துறை டார்கெட்ஆனால் ஸ்டாலின் இப்படி கணக்கு போட்டாலும், மறுபுறம் அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, துரைமுருகன் எனப் பலரும் அமலாக்கத்துறை பார்வையில் இருப்பதாக தகவல் வெளியாகி அரசியல் சூட்டை கிளப்பியுள்ளது. இந்நிலையில் டெல்லி vs திமுக என்ற மோதலில் ஸ்டாலினின் கை ஓங்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.