சென்னை: இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கான தனி ரூட்டை பிடித்துக் கொண்டு சினிமாவில் முன்னேறி வருகிறார் நடிகர் சந்தோஷ் பிரதாப். துணை நடிகராகவும் செகண்ட் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வரும் சந்தோஷ் பிரதாப்பின் லேட்டஸ்ட் சிக்ஸ்பேக் புகைப்படம் வேறலெவலில் மிரட்டி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் நடிகைகள் படு கவர்ச்சியாக போட்டோக்களை போட்டு லைக்குகளை அள்ளி வந்தாலும், எப்போதாவது நடிகர்கள் சிக்ஸ்பேக் புகைப்படங்களை பதிவிட்டால் அதற்கு இருக்கும் கிரேஸே தனி கிரேஸ் தான்.
இந்த ஆண்டு வெளியான பத்து தல, கழுவேர்த்தி மூர்க்கன், டியர் டெத், கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சந்தோஷ் பிரதாப்.
பார்த்திபன் படத்தில் அறிமுகம்: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2014ல் வெளியான கதை திரைக்கதை வசனம் படத்தில் நடிகராக அறிமுகமானார் சந்தோஷ் பிரதாப். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் அவார்ட்ஸை வென்றார்.
அதன் பின்னர், தாயம், பயமா இருக்கு, மிஸ்டர் சந்திரமெளலி, பொது நலன் கருதி, தேவ், நான் அவளை சந்தித்தபோது, பஞ்சராக்ஷரம், ஓ மை கடவுளே, இரும்பு மனிதன், என் பெயர் ஆனந்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை தந்த அங்கீகாரம்: ஆனால், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய பின்னர் தான் சந்தோஷ் பிரதாப்புக்கு செகண்ட் இன்னிங்ஸே சினிமாவில் ஆரம்பித்தது என்று சொல்லலாம்.
குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஃபைனலிஸ்ட் ஆகியிருந்த சந்தோஷ் பிரதாப் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
சிக்ஸ்பேக்கில் செம: இந்த ஆண்டு வெளியான படங்களில் சிம்புவின் பத்து தல படத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ரோலிலேயே நடித்திருந்தார் சந்தோஷ் பிரதாப். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் பூமிநாதன் கதாபாத்திரத்தில் வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அடுத்ததாக த்ரிஷாவின் தி ரோடு படத்தில் நடித்துள்ள சந்தோஷ் பிரதாப் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச் மணலில் சட்டை இல்லாமல் சிக்ஸ்பேக் உடம்பைக் காட்டும் போட்டோவை வெளியிட்டு இளம் ரசிகைகளின் மனதில் இடம்பிடித்துள்ளார்.