சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம் படத்தில் ரோலக்ஸா வந்து மிரட்டிய சூர்யாவின் போட்டோவை ரசிகர்கள், வாட்ஸப் ஸ்டேட்டஸில் ரயில்விட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவின் பிறந்த நாளான இன்று அவர் குறித்து பல தகவல்களை ரசிகர்கள் தேடி தேடி படித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா குறித்த சுவாரசியத் தகவல் இதோ.
நடிகர் சூர்யா: நேருக்கு நேர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா. முதல் படம் ஓரளவுக்கு பேசப்பட்டாலும், அடுத்தடுத்த படங்கள் சரியாக ஓடாததால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். பல விமர்சனத்தை சந்தித்த பிறகும், தனது வித்தியாசமான நடிப்பால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
அடுத்தடுத்து ஹிட் படம்: காக்க காக்க, பேரழகன், ஆதவன், மாற்றான் உள்ளிட்ட படங்களில் நடிகர் சூர்யா தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலஸாக நடித்து மாஸ் நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்துவிட்டார்.
சூர்யாவின் 42வது படம்: தற்போது சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இப்படததில் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். பிரம்மாண்ட பொருட்செலவில் 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சத்தமா விசில் அடிப்பேன்: இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் சூர்யா, கல்லூரி விழா ஒன்றில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில், என்னுடைய கல்லூரி நினைவுகள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. என்னுடைய நண்பர்கள் அனைவரையும் இந்த இடத்தில் பார்பதில் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு பாட தெரியாது. ஆனால், விசில் சத்தமா அடித்து அதிலேயே பாட்டுப்பாடுவேன்.
நான் தான் பிகில்: கல்லூரியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அதில் என் விசில் சத்தம் தான் கேட்கும். இதனால், என் நண்பர்கள் என்னை பிகில் என அழைத்தார்கள். என்னை அப்படி அழைத்தவர்கள் நிறைய பேர் தற்போது உள்ளார்கள் என சூர்யா பேசியுள்ளார். இந்த வீடியோவை சூர்யாவின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.