சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவின் கிராபிக்ஸ் இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம் என்று பத்திரிக்கையாளர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
கங்குவா திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்திலே அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும் திரைப்படமாகும். பத்து மொழியில் இரண்டு பாகங்களாக உருவாகும் கங்குவா படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1500 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெறுவது போன்ற கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தில், பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கிராபிக்ஸ் நல்லா இல்லை: இந்நிலையில் சினிமா மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோவில் கிராபிக்ஸ் வேலையை இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றபடி ஆரம்ப காட்சியில் சூர்யா வருவது, இறுதியில் நலமா என, கேட்பது ரசிக்கும் படி இருக்கு. விக்ரம் படத்தில் கமல் ஆரம்பிக்கலாமா என கேட்கும் போது ரசிகர்கள் எப்படி உணர்ச்சி வசப்பட்டார்களோ அதே போல நலமா என கேட்பதும் ரசிக்கும் படி இருந்தது.
வெவ்வேறு காலகட்ட கதை: கங்குவா படம் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதை, தற்போது வெளியாகி இருக்கும் கிளிம்ப்ஸ் பிளாஸ்பேக்கில் ஒரு கதை. 1500 வருடங்களுக்கு முன் இருந்த ஒரு கதாபாத்திரத்தின் கதை படத்தில் ஒரு மணிநேரம் வருகிறிது. மற்றபடி வரும் அனைத்துமே நிகழ்கால சம்பவங்களை வைத்துத்தான் கதை வருகிறது. அப்படி இருக்கும் போது இரண்டையும் கலந்து விட்டு கிளிம்ப்ஸ் வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்து இருக்கும்.

முழுக்க கற்பனைக் கதை: மேலும், சிலர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் தொடர்ச்சி என்று பேசி வருகிறார்கள். ஏழாம் அறிவு ஒரு வரலாற்றுப்படம். ஆனால் கங்குவா படம் வரலாற்று படம் என்று சொன்னால் பல சிக்கல்களை வரும், பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துவிட்டு மணிரத்னமே படாதபாடுபட்டார் என்பதால், இப்படம் முழுக்க முழுக்க கற்பனைக் கதை என்று இயக்குநர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் அந்தணன் கங்குவா படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.