பாட்னா: பீகாரில் ஓவைசி கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த மாநில தலைவரும், எம்எல்ஏவுமான அக்தருல் இமான் வீட்டில் 50க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நாடு முழுவதும் மழைக்காலம் தொடங்கி உள்ளதால், காட்டில் வசிக்கும் நாகபாம்புகள் உள்பட பல உயிரினங்கள் பாதுகாப்பு தேடி, நகர்ப்புறங்களுக்கு படையெடுத்து வருகின்றன. இந்த நிலையில், பீகாரில் ஒரு வீட்டில் நாகப்பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக தகவல்கள் பரவின. விசாரணையில், நாகப்பாம்புகள் குடியிருந்த இடமானது, அங்குள்ள ஓவைசி […]
